கந்தரனுபூதி-38
ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண் டது
செப்புமதோ
கூதாள கிராதகுலிக்கு
இறைவா
வேதாள கணம் புகழ்
வேலவனே.
(ஆதாளியான ஒன்றும்
அறியாவனான அறத்தைவிட்ட தீதாளனான என்னை நீ ஏற்று அரவணைத்து ஆண்டதை சொல்லவும்
முடியுமோ இறைவா! கூதாள மலர்களை அணிந்த கிராதகுலி கூட்டமான வள்ளிக்கு இறைவனே!
வேதாளக் கூட்டம் உன்னைப் புகழும் வேலவனே!)
ஆதா ளியையொன் றறியே
னையறத்
தீதா ளியையாண்
டதுசெப் புமதோ
கூதா ளகிரா தகுலிக்
கிறைவா
வேதா ளகணம் புகழ்வே
லவனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-38)
**
No comments:
Post a Comment