கந்தரனுபூதி-44
சாடும் தனிவேல்
முருகன் சரணம்
சூடும்படி தந்தது
சொல்லுமதோ
வீடும் சுரர் மா முடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே.
(எதிரிகளைச் சாடும்
தனிவேலைக் கொண்ட முருகனே உன்னை சரணடைகிறேன்! வீடு என்னும் முக்தி நிலையிலும், சுரர் என்னும் விண்ணவர்களின் மா முடியிலும், வேதங்களிலும், கொடுமையான காட்டிலும், தினைப் புனத்திலும், புகழ் விளங்கி வரும் உன்
திருவடிகளை என் தலைமீது ஏற்றிக் கொள்ள கருனை புரிந்ததை சொல்லவும் கூடுமோ!)
சாடுந் தனிவேன்
முருகன் சரணஞ்
சூடும் படிதந்
ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா
முடிவே தமும்வெங்
காடும் புனமுங்
கமழுங் கழலே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-44_
**
No comments:
Post a Comment