திருமுருகாற்றுப்படை
(திருப்பரங்குன்றம்)
உலகம் உவப்ப வலன்
ஏர்புதிரிதரு
பலர் புகழ் ஞாயிறு
கடற்கண்டா அங்கு
ஒவற இமைக்கும்
சேண்விளங்கு அவிர்ஒளி
உறுநர்த்தாங்கிய
மதனுடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த
செல்உறழ் தடக்கை.
(உலகில் உள்ள
உயிர்கள் எல்லாம் மகிழ, வலமாக எழுந்து வானத்தில்
உலாவும், பலரும் புகழும் கதிரவனை, கடலின்
மேலே உதயமாகும்போது கண்டதுபோதும், அதிலிருந்து எவ்வளவு தூரம்
சென்றாலும் அதன் ஒளி பரவி நிற்கும்; அதுபோல எங்கும் ஒளிபரவிய
முருகனே! மனிதன் இன்பத்தை மட்டுமே விரும்புவான்; துன்பத்தை
வெறுப்பான்; கண்ணன் கீதையில் "எல்லாப் பற்றையும்
விட்டுவிட்டு என் திருவடியைப் பற்றிக் கொண்டு, உன் கவலையைப்
போக்கு" என்கிறான்; அதுபோல, பகைவர்களை
அடியோடு அழிக்கும் பராக்கிரமத்தை உடைய முருகன் தடக்கைகள் என்று முருகனின் பெருமையை
நக்கீரர், திருமுருகாற்றுப்படை முதல் பாட்டில் பாடியுள்ளார்;)
**
No comments:
Post a Comment