கந்தரனுபூதி-40
வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி
மயங்கிடவோ
சுனையோடு அருவித்
துறையோடு பசுந்
தினையோடு இதனோடு
திரிந்தவனே.
(வினையை ஓடும்படி
விரட்டி விடும் கதிர்வேலை மறக்க மாட்டேன்! நான், மனை
என்னும் இந்த இல்வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு, கலங்கி,
மயங்கி, திரிய, நீ என்னை
விடலாமா! சுனையாடும், அருவிகளோடும், அருவித்
துறைகளோடும், பசுமையான தினை கதிர்களோடும் இவற்றோடு (வள்ளி
திரியும் காட்டில்) திரிந்தவனே!)
வினையோ டவிடுங்
கதிர்வேன் மறவேன்
மனையோ டுதியங் கிமயங்
கிடவோ
சுனையோ டருவித்
துறையோ டுபசுந்
தினையோ டிதனோ
டுதிரிந் தவனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-40).
**
No comments:
Post a Comment