Saturday, March 19, 2016

திருமுருகாற்றுப்படை-2


திருமுருகாற்றுப்படை-2

செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
மறுஇல் கற்பின் வாள்நுதர் கணவன்
கார்கோள் முகந்த கமம்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து
(நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை பாடல்-2)

செல் உறழ் தடக்கை என்னும் இடி போன்ற உறல் போன்ற கைகள் கொண்டு பகைவர்களை ஒழித்த முருகப்பெருமான்; மறுவில் கற்பின் வாள்துதல் கணவன் என்னும் குற்றமற்ற கற்புடைய தேவயானையின் கணவனான முருகனே!

தேவயானை முருகப்பெருமானின் அருகில் அமர்ந்திருக்கிறார்; இரண்டு பேரையும் ஒருசேர வைத்துக் காட்டுகிறார் நக்கீரர்; முதலில் ஒளிப்பிளம்பைக் காட்டி, பின் அவர் திருவடியைக் காட்டி, திருக்கரத்தைக் காட்டி, அக்கரத்தினால் பற்றிக் கொண்டு மணம் செய்து கொண்ட தேவயானையைக் காட்டி, அந்தப் பெருமாட்டியின் கணவன் முருகன் என்று சொல்கிறார்;
**


No comments:

Post a Comment