அரசனின் குதிரையின்
அங்க லட்சணம்
மாதர்தம் மனத்தையொத்த
மனத்ததாய் வாழையுற்ற
கோதிலா மடலேபோலக்
கொழுந்துள செவியதாகிப்
பாதமுன்
வெந்நெருத்துப் பகர்முகம் பான்மைத்தாகி
ஓதுமெண்
பத்திரண்டங்குலி யுயர்பரி மன்னர்க்காம்.
மன்னர்கள் வைத்துக்
கொள்ளும் குதிரையின் அங்க லட்சணம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்தப் பாடல்
சொல்கிறது;
"மகளிர் மனம்
போன்ற மனம் இருக்கவேண்டுமாம்; வாழைப்பூ மடல் போன்று அதன்
காதுகள் இருக்க வேண்டுமாம்; குதிரையின் நான்கு கால்களும்
முன்புறமும் முதுகும், பிடரித் தலையும், முகமும் வெண்மை உடையாதாய் இருக்க வேண்டுமாம்; எண்பத்திரண்டு
அங்குலம் உயரம் இருக்க வேண்டுமாம். (கிட்டத்தட்ட ஆறேமுக்கால் அடி உயரம் இருக்க
வேண்டுமாம்); இதுவே
அரசன் வைத்துக் கொள்ள வேண்டிய குதிரையின் தகுதியாம்;
**
No comments:
Post a Comment