அத்தி தலம் முருகன்
பிள்ளைத் தமிழ்-(1)
திருமால்
பாற்கடலில்
பாம்பணையில் பள்ளிகொண்டு பார் காக்கும்
பைந்தார் மார்ப
பதும மின்னும் பார்
மகளும் பாங்கிருக்க அருள் சுரக்கும்
பண்பே கொண்டாய்
போர்க்கருவி கொள்ளாது
புரந்தரனார் பொழிந்தமழை
பொருப்பால் நீக்கிப்
பொதுவரொடு
நிரைகாத்துப் புகழ்கொண்ட கோபால
போற்றிக் காக்க
நூற்கடலில் நுழைத்த
முது நுகர்தவராம் கைதை
நகருள்ளோர் வாழ
நுவலுதிருப்பதியாய
அத்திதலம் வீற்றிருக்கும்
செவ்வேட் சேயை
நாற்கடலும்
புவிமுகந்து நாமொடுங்கும் காலத்தும்
நாவாயாகி
நவைதீர்த்த
கதியேற்றும் அருளான மூர்த்தியெனுங்
குகனை மாதோ.
**
No comments:
Post a Comment