கந்தரனுபூதி-51
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய்
மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க்
கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே.
(உருவத்துடனும், உருவமில்லா அருவத்துடன், இருக்கின்ற
நிலையிலும், இல்லாத நிலையிலும், மணமுள்ளதாகவும்,
மலராகவும், மணியாகவும், ஒளியாகவும்,
உயிர் உருவாகும் கருவாகவும், அதன் உயிராகவும்,
நற்கதியாகவும், விதி என்னும் நற்கதியை அடையும்
நல்விதியாகவும், நீ எனக்குக் குருவாக வருவாய்! வந்து
அருள்புரிவாய்! குகனே!)
உருவா யருவா யுளதா
யிலதாய்
மருவாய் மலராய்
மணியாய் யொளியாய்க்
கருவா யுயிராய்க்
கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா
யருள்வாய் குகனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-51)
(கந்தரனுபூதி முற்றும்).
**
No comments:
Post a Comment