ஆயுட்பாவகம்
ஆயுட்பாவகம் என்னும்
நூல் ஆதி சங்கரர் இயற்றிய சோதிட நூல் ஆகும்; நமக்கு ஏற்படும் நன்மை
தீமைகளை முன்னரே அறிந்து விலக்கிக் கொள்ள, சோதிடம் என்னும்
விதிவிலக்கு உள்ளதாம்;
இந்த சோதிடத்தை, ஆதியில், சங்கரன் (சிவன்)
உமைக்கு உபதேசிக்க, அதை உமை, சித்த
புருடர்களுக்கு உபதேசிக்க, அவர்கள் சொல்லியதைத் திரட்டி,
சாரதாம்பாள் அருள் பெற்ற ஆதி உலோககுரு சங்கராச்சாரியார் 12,000 செய்யுள்களாக இயற்றி உள்ளார்;
இப்போதுள்ள சாதக
சிந்தாமணி நூல், குமாரசுவாமியம் நூல் போன்றவை
சோதிடத்தைப் பற்றி ஓரளவு சொல்லியுள்ளன; ஆனால்
சங்கராச்சாரியத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பவை: ஆயுள், வித்தை,
சகோதரம், மாதுர், புத்திரர்,
சத்ரு, களத்திரம், ரோகம்,
பிதுர்யோகம், பாக்கியம், சயனம், பதவி முதலியன.
ஆதிசங்கரர் எழுதிய
ஆயுட்பாவகத்தின் கடவுள் வாழ்த்து:
"ஓதிய பெரியோர்
வாக்கால் உரைத்திடும் நூல்கள் தன்னை
மேதினி தனிலே நன்றாய்
விளங்கிடச் செய்யுளாகச்
சோதிடப்
பலன்களெல்லாம் தொகுத்துயான் விளம்புதற்கு
ஆதியின் மூலமான ஐங்கரன்
காப்பதாமே."
ஆதிசங்கரர் எழுதிய
ஆயுட்பாவகத்தின் சரஸ்வதி வாழ்த்து;
"செங்கண்மால்
அருளினாலே செகந்தனில் மனுவுக்கெல்லாம்
இங்கிதமாக நல்ல
சோதிடமியம்ப வேண்டித்
திங்களின் நிறத்தை
ஒத்த தேவியாய் வந்துதித்த
பங்கய முகத்தாள் பால
சரஸ்வதி பாதங் காப்பாம்."
விநாயகர் காப்பு:
அவடியிற் பெரியோர்
தங்கள் அனுக்கிரகத்தால் யானும்
புவனியின்
மனுவுக்கெல்லாம் புகழ்ந்து சோதிடத்தைச் சொல்லச்
சிவனருள் மைந்தனான
செந்தில் வேலவன் முன் வந்த
குவலையம் புகழ
ஒற்றைக் கொம்பனுங் காப்பதாமே.
அண்டம் வாழ் முனிவர்
தங்கள் அனுக்கிரகத்தால் யானும்
மண்டலந் தன்னில்
யார்க்கும் வரும் நிகழ் செல் காலங்கள்
உண்டிடும் கனாவஉம்
சாவும் யோகமும் ரோகம் யாவும்
வண்டணி குழலாய் மிக்க
பலன் வகுத்துரைக்கலுற்றேன்.
பொன்னவன் ரவி
செவ்வாய் புந்தியும் பிறையும் சுங்கன்
தன்னோடு காரி ராகு
சனிமகன் கேதின் னோர்கள்
முன்னிவர் வேத நூலால்
மொழிந்திடும் பலன்களெல்லாம்
சொன்னது தவறாதென்று
தொடங்கினான் சங்கரன்தான்.
**
No comments:
Post a Comment