அரசன் வைத்துக்
கொள்ளும்
யானையின் அங்க லட்சணம்:
"காலொரு நாலு
கோசங்கை வாலேழ் நிலத்திற்றோய்ந்து
பாவலோடு சங்குபோலும்
பதத்துகிர்விதத்திற் சூழ்ந்து
வாலொடு கான்மேய்கை
வெண்மருப்பினாலுயிரைக் கொன்றே
ஏலவேழுயர்ந்தொன்
பானீண்டீரைந் துமுழத்ததாகி.
பெறுமுறை
முன்புயர்ந்து பின்பணிந்தழகிதாய
தறுகண்ணதாகச் சூழி
சார்ந்த மத்தகத்ததாகி
முறநிகர் கன்னதான
மூரிமால் யானைதானே
அறநெறி செலுத்துஞ்
செங்கோலரசு வாவாகுமென்ப."
இதில், அரசன் வைத்துக் கொள்ள வேண்டிய யானையின் அங்க
லட்சணங்கள் விவரிக்கப் பட்டுள்ளது;
"நான்கு
கால்களும், கோசமும், துதிக்கையும்,
வாலும் ஆகிய ஏழு உறுப்புகளும் நிலத்திலே தோய்ந்து, காலில் வெண்மையான நகமுடையதாய், வால், நாலுகால், உடம்பு, துதிக்கை
இரண்டு கொம்பு என்னும் இவற்றால் கொல்ல வல்லதாய், ஏழு முழம்
உயரம் ஒன்பது முழம் நீண்டு, பத்து முழம் சுற்றுளவு உடையதாய்,
முன்னால் உயர்ந்து, பின்னால் தாழ்ந்து,
அழகியதாய், கண்களையும், சூழி
சார்ந்த மத்தகத்தை உடையதாய், சுளகு போன்ற காதுகளை உடையதாய்,
மும்மதத்தையும் உடையதாய் உள்ள யானை அரசருக்கு அரசனாகும்."
**
No comments:
Post a Comment