கந்தரனுபூதி-36
நாதா குமரா நம என்று அரனார்
ஓதா என ஓதியது எப்
பொருள் தான்
வேதா முதல் விண்ணவர்
சூடுமலர்ப்
பாதா குறமின் பத
சேகரனே.
("நாதா குமரா
நம" என்று அரனார் (சிவன்) ஓதும்படி கேட்டு, நீ
ஓதியது எப்பொருளைப் பற்றியோ சொல்வாய்! வேதா என்னும் பிரம்மன் முதல் விண்ணவர் வரை
சூடும் மலரைத் தன் திருப்பாதங்களில்
உடையவனே! குறத்தியின் பாதத்தை உச்சியில் கொண்டிருப்பவனே!)
நாதா குமரா நமவென்
றரனா
ரோதா யெனவோ தியதெப்
பொருடான்
வேதா முதல்விண்
ணவர்சூ டுமலர்ப்
பாதா குறமின் பதசே
கரனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-36)
No comments:
Post a Comment