கந்தரனுபூதி-35
விதிகாணும் உடம்பை
விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல்
என்று அருள்வாய்
மதிவாண் துதல்
வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுர
பூபதியே.
(விதியுடன் பிறந்த
இந்த உடம்பை விட முடியாமல் இருக்கிறேனே! அதிலிருந்து விடுபட, உனது கழல்களைப் போல எனக்கு அருள்தருவாய்! மதி என்னும்
பிறை போன்ற நெற்றியுடைய வள்ளியைத் தவிர வேறு யாரையும் துதிக்காத விரதத்தை
கொண்டவனே! சுர பூபதியே!)
விதிகா ணுமுடம்
பைவிடா வினையேன்
கதிகா ணமலர்க் கழலென்
றருள்வாய்
மதிவா ணுதல்வள்
ளியையல் லதுபின்
றுதியா விரதா சுரபூ
பதியே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-35)
**
No comments:
Post a Comment