Showing posts with label கந்தரனுபூதி. Show all posts
Showing posts with label கந்தரனுபூதி. Show all posts

Sunday, March 13, 2016

கந்தரனுபூதி-51


கந்தரனுபூதி-51

உருவாய் அருவாய்  உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

(உருவத்துடனும், உருவமில்லா அருவத்துடன், இருக்கின்ற நிலையிலும், இல்லாத நிலையிலும், மணமுள்ளதாகவும், மலராகவும், மணியாகவும், ஒளியாகவும், உயிர் உருவாகும் கருவாகவும், அதன் உயிராகவும், நற்கதியாகவும், விதி என்னும் நற்கதியை அடையும் நல்விதியாகவும், நீ எனக்குக் குருவாக வருவாய்! வந்து அருள்புரிவாய்! குகனே!)

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியாய் யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-51)

                        (கந்தரனுபூதி முற்றும்).

**

கந்தரனுபூதி-50


கந்தரனுபூதி-50

மதிகெட்டு அறவாடி மயங்கி அறக்
கதிகெட்ட அவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா அதிபவத்
திதி புத்திரர் வீறடு சேவகனே.

(மதி கெட்டு, உள்ளம் மயங்கி, முழுவதும் கெட்டு, நற்கதியான முக்தியைப் பெறும் வழியை இழந்து போகும்படி ஆகிவிடுமோ! நதியின் புத்திரனே! ஞான சுகத்தின் அதிபதியே! திதி புத்திரர்களின் பெருமையைக் குலைத்த சேவகனே)

மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவே
னதிபுத் திரஞா னசுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-50)

**

கந்தரனுபூதி-49


கந்தரனுபூதி-49

தன்னம் தனிநின்றது தானறிய
வின்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னம் களையும் கிர்பைசூழ் சுடரே.

(தன்னம் தனியாக நின்ற, தனித்த, பரம்பொருள் இதுதான் என்று அறிந்து, இன்னும் ஒருவர்க்கு சொல்ல இயலுமா! இன்னும் கதிர்வேலை உடைய விகிர்தா! உன்னை நினைப்பவர்களின் கின்னம் என்னும் துயரங்களை களைந்து நீக்கி கிருபை சூழ வைக்கும் சுடரானவனே!)

தன்னந் தனிநின் றதுதா னறிய
வின்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையுங் கிர்பைசூழ் சுடரே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-49)

**

கந்தரனுபூதி-48


கந்தரனுபூதி-48

அறிவு ஒன்றற நின்று அறிவார் அறிவில்
பிறிவு ஒன்றற நின்று பிரானலையோ
செறிவு ஒன்றற வந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

(அறிவு ஒன்றுபட நின்று அறிபவர்களின் அறிவில், பிறிவு ஒன்றற நிற்கும் பிரானே! செறிவு ஒன்றற வந்து இருள் மயக்கம் நீக்கி, வெறி மயக்கத்தை வென்றவர்களாடு கலக்கும் வேலவனே!)

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டுறும்வே லவனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-48)

**

கந்தரனுபூதி-47


கந்தரனுபூதி-47

ஆறாறையும் நீத்து அதன் மேனிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.

(ஆறு ஆறான மொத்தம் 36 தத்துவங்களையும் நீந்திக் கடந்து, அதன் மேல் நிலையை அடையும் பேற்றை பெற எனக்கு வழி உள்ளதா! கோபத்துடன் வந்த சூர்பர்மனை சிதைத்து அழித்து, இமையோர் என்னும் கண் இமைக்காத வானவர்கள் மகிழும்படி அவர்களின் கூறா உலகத்தை குளிர்வித்தவனே!)

ஆறா றையுநீத் ததன்மே னிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-47)
**


கந்தரனுபூதி-46


கந்தரனுபூதி-46

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.

(என் தாயும், என் அருள் தந்தையும் ஆக நீ இருக்கிறாய்! என் சிந்தையின் குழப்பங்களை தீர்த்து என்னை ஆட்கொள்வாய்! கந்தா! கதிர்வேலவனே! உமையாளின் மைந்தனே! குமரா! மறை என்னும் வேதங்களுக்கு நாயகனே!)

எந்தா யுமெனக் கருடந் தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாண்
மைந்தா குமரா மறைநா யகனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-46)

**

கந்தரனுபூதி-45


கந்தரனுபூதி-45

கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே.

(கற்ற கலவியாளர்கள், தான் கற்ற கல்வியைப் பிறர் பயன்பெற செய்யாமல் தானே வைத்துக் கொண்டிருக்கும் கல்வியாளர்களிடம் சென்று மெய்ப் பொருள் உண்மையைக் கேட்கும்படி வைக்காமல், நீயே மெய்ப்பொருளை ஈந்து அருள்புரிந்துள்ளாய்!  குரவா! குமரா! குலிசா! (ஆயுதம் தாங்கியவனே!) குஞ்சரவா! (யானையை வைத்திருப்பவனே!), சிவயோகத்தை அருளியவனே! தயாபரனே!)

கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-45)

**

கந்தரனுபூதி-44


கந்தரனுபூதி-44

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும்  சுரர் மா முடி வேதமும் வெங்
காடும் புனமும்  கமழும் கழலே.

(எதிரிகளைச் சாடும் தனிவேலைக் கொண்ட முருகனே உன்னை சரணடைகிறேன்! வீடு என்னும் முக்தி நிலையிலும், சுரர் என்னும் விண்ணவர்களின் மா முடியிலும், வேதங்களிலும், கொடுமையான காட்டிலும், தினைப் புனத்திலும், புகழ் விளங்கி வரும் உன் திருவடிகளை என் தலைமீது ஏற்றிக் கொள்ள கருனை புரிந்ததை சொல்லவும் கூடுமோ!)

சாடுந் தனிவேன் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-44_

**

Saturday, March 12, 2016

கந்தரனுபூதி-43


கந்தரனுபூதி-43

தூசா வணியும் துகிலும் புனைவாள்
ணேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அனுபூதி பிறத்ததுவே.

(தூசா மணியும் துகிலும் அணியும் வள்ளியின் நேசனே முருகா! உனது அன்பு அருளால் எனக்கு கிடைத்த பேற்றால், எனது ஆசை என்னும் வினை தூளாகிளது! அதன்பின்னர், பேசா நிலையை அடைந்து, ஞான அனுபவம் கிடைத்ததுவே!)

தூசா வணியுந் துகிலும் புனைவா
ணேசா முருகா நினதன் பருளா
லாசா நிகளந் துகளா யினபின்
பேசா வனுபூ திபிறத் ததுவே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-43)

**

கந்தரனுபூதி-42


கந்தரனுபூதி-42

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

(குறிக்கோளை குறிவைக்காமல், முக்தியை குறித்து அறியும் நெறியை, தனிவேலை உடையவன் எனக்கு நிகழ்த்தி உள்ளான்! அதனால், நான் செறிவு பெற்று, இந்த உலகத்துடன் உரையும் சிந்தையும் அற்று, எனது அறியாமையும் நீங்கி விட்டதுவே!)

குறியைக் குறியா துகுறித் தறியு
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையுமற் றதுவே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-42)

**

கந்தரனுபூதி-41


கந்தரனுபூதி-41

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செய்யும் நாள்
வாகா முருகா மயில் வாகனனே
யோகா சிவ ஞானோப தேசிகனே.

(நமன் என்னும் யமன் கலகம் செய்து என் உயிரை எடுக்க வரும் நாளில், என்னை  இறக்க விடாமல் என்னை, உன் பாதங்களில் சேரும்படி காப்பாற்றுவாய்! வாகா முருகனே! மயிலை வாகனமாக உடையவனே! யோகனே! சிவஞான உபதேசிகனே (சிவனுக்கு ஞானத்தை உபதேசித்தவனே!)

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னோபதே சிகனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-41)

**