கந்தரனுபூதி-48
அறிவு ஒன்றற நின்று
அறிவார் அறிவில்
பிறிவு ஒன்றற நின்று
பிரானலையோ
செறிவு ஒன்றற வந்து
இருளே சிதைய
வெறி வென்றவரோடு
உறும் வேலவனே.
(அறிவு ஒன்றுபட
நின்று அறிபவர்களின் அறிவில், பிறிவு ஒன்றற நிற்கும்
பிரானே! செறிவு ஒன்றற வந்து இருள் மயக்கம் நீக்கி, வெறி
மயக்கத்தை வென்றவர்களாடு கலக்கும் வேலவனே!)
அறிவொன் றறநின் றறிவா
ரறிவிற்
பிறிவொன் றறநின்
றபிரா னலையோ
செறிவொன் றறவந்
திருளே சிதைய
வெறிவென் றவரோ
டுறும்வே லவனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-48)
**
No comments:
Post a Comment