ஏர் கொண்ட
பொய்கைதனில் நிற்குமொரு
பேரரசின் இலைகீழ்
விழில் பறவையாம்;
இது நிற்க நீர்விழில்
கயலாம்; இதன்றி ஒரு
இலை அங்கும்
இங்குமாகப்,
பார்கொண்ட பாதியும்
பறவை தானாக அப்,
பார்கொண்டு இழுக்க
அது, நீர்கொண்டு இழுக்க
இப்படிக் கண்டது
அதிசயம் என,
நீர்கொண்ட வாவிதனில்
நிற்குமொரு பேழ்வாய்
நெடும் பூத
மதுகொண்டுபோய்,
நீள்வரை எடுத்தன்
கீழ்வைக்கும் அதுகண்டு
நீதிநூல் மங்காமலே
சீர்கொண்ட நக்கீரனைச்
சிறைவிடுத்தவா
செங்கீரை ஆடியருளே!
திரைஎறியும் அலைவாய்
உகந்த வடிவேலனே!
செங்கீரை ஆடியருளே!
(பகழிக்கூத்தர்
இயற்றியது)
**
No comments:
Post a Comment