திருமுருகாற்றுப்படை
செந்தமிழ் நூல்களில்
நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படை சிறப்பிடம் பெறுகின்றது; சங்க காலத்து பத்துப் பாட்டு நூல்களுள் முதலாவதாக
அந்தத் தொகுதிக்கு ஒரு கடவுள் வாழ்த்துப் போன்று அமைகிறது என்கிறார் யாழ் பல்கலைகழக
உதவிப் பதிவாளராக இருந்த கவிஞர் இ.முருகையன்;
குறிஞ்சிக் கடவுளாகிய
ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளைப் பற்றியும் சிறப்பாக இந்த
திருமுருகாற்றுப்படை எடுத்துக் கூறுகிறது; இதன் சிறப்பு என்னவென்றால்,
"ஆறுமுகன் அருள்பெற்ற மெய்யடியார் ஒருவர் அவனருளாலே அவன் தாள்
வணங்கி அவனருளை நாடி நிற்கும் வேறு அடியார் ஒருவரை ஆறுமுகப் பெருமான் கோயில்
கொண்டு அமரும் ஆறுபடை வீடுகளுக்கு ஆற்றுப் படுத்துவதாக அமையும் அரிய பொருள் வைப்பு
முறையைப் பெற்று மிளிர்வது. முதற்படை வீடாகிய திருப்பரங்குன்றத்தில் முருகன்
இயற்கையோடியந்த அருவுருவ நிலையில் காட்சி
அளிக்கிறான்;
இரண்டாவதாக
திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூரில் கருணை கூர்முகங்கள் ஆறும் கரங்கள்
பன்னிரண்டும் கொண்டு பரிபூரணனாகக் காட்சி தருகிறான்;
திருவாவினன்குடி
என்னும் பழனியில் முருகப் பெருமானை அருவமாய்க் கடந்த நிலையில் நக்கீரர் வருணித்துக்
காட்டுகிறார்;
நான்காவது படைவீடாகத்
திருவேரகத்தைப் பாடி, அங்கு முருகப்பெருமானை
அந்தணர் போற்றும் மந்திர ரூபியாய் வேதத்தின் உட்பொருளாகப் காட்டுகிறார்; அனுபூதிமான்களுக்கே அல்லாமல் மலைவாழ் வேடர் முதலிய அடிநிலை மக்களுக்கும்
எளியனாய் வெளிவந்து முருகவேள் அருள்புரிவான் என்பது ஐந்தாவதாகிய குன்று தோறாடற்
பகுதியில் எடுத்துக் காட்டுகிறார்;
"புயற் பொழில்
பயற்பதி நயப்படுதிருத்தணி" இக்குன்றுகளில் ஒன்றாகும். ஆறாவதுபடை வீடாக
பழமுதிர் சோலை சொல்லப்படுகின்றது; இத்தலம் இப்போது திருமால்
வீற்றிருக்கும் பதியாக அழகர்கோயில் என்னும் பெயருடன் விளங்குகிறது; திவ்வியப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களில் "திருமாலிருஞ்சோலை"
என இப்பதி வழங்கப்படுகிறது;முருகனும் அழகனும் ஒரு
பொருற்சொற்களே! அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் எல்லாவற்றிலும்
முடிவில் முருகப்பிரானை பெருமாளே என்று விளித்துப் பாடியிருப்பது நோக்கத்தக்கது;
**
No comments:
Post a Comment