Friday, March 18, 2016

இதோபதேசம் (மான், நரி, காகம்)


இதோபதேசம்
(மான், நரி, காகம்)

மரமில்லா இடத்தில் ஆமணக்கும் மரமாகும்! அதுபோல், வித்துவான் இல்லாத இடத்தில், அற்பம் அறிந்தவனும் வித்வான் ஆகிறான்!  உதார குணம் உள்ளவனுக்கு உலகம் முழுதும் சுற்றமே! பகையும் உறவும் இயல்பிலேயே ஒருவருக்கும் இல்லை; பகையும் உறவும் நன்மை தீமைகள் என்னும் காரணங்களால் சம்பவிக்கின்றன;

மானும், நரியும், காகமும் சேர்ந்த வாழத் தீர்மானித்தன;

ஒருநாள், நரி, மானிடம், "நண்பனே! இங்கு பக்கத்தில் பயிர் நிறைந்த வயல் ஒன்று இருக்கிறது: வந்து பார்க்கிறாயா? என்று கேட்டு அதைக் கூட்டிக் கொண்டுபோய் காட்டியது; மானுக்குச் சந்தோஷம்; தினம் தினம் அந்த பயிரை மேய்ந்து வந்தது; வயலுக்குச் சொந்தக்காரனுக்கு கோபம்; ஒரு நாள் ஒரு வலையை விரித்து வைத்திருந்தான்; மான் வலையில் அகப்பட்டுக் கொண்டது; "என்னை என் நண்பன் நரி வந்து காப்பாற்றுவான்" என்று நினைத்துக் கொண்டது; ஆனால், நரிக்கு வேறு யோசனை வந்துவிட்டது; அதன் இறைச்சி மேல் ஒரு கண் ஏற்பட்டது; வலையில் சிக்கிய மானிடம் சென்ற நரி, "இன்று எனக்கு பனுவார விரதம்; எனவே நான் என் பற்களால் வலையை தொடமாட்டனே! விடிந்ததும் நான் வந்து வலையை வெட்டி உன்னை காப்பாற்றுகிறேன்" என்று தந்திரமாகக் கூறியது;

மானின் நண்பனான காகத்துக்கு இந்த சம்பவம் தெரியாது; மானைக் காணவில்லையே என்று தேடுகிறது; வலையில் மாட்டிக் கொண்ட மானிடம் வந்து "இது என்ன கொடுமை நண்பா?" என்றது; மானோ, "நரியின் சொல்லைக் கேட்டு, பயிரை மேய்ந்தேன்; இந்த கொடுமைக்கு ஆளானேன்" என்றது: "எங்கே அந்த வஞ்சக நரி?" என்று கோபமாக கேட்ட காகத்துக்கு, "என் மாமிசத்துக்காக பக்கத்தில் மரத்துக்குப்பின் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறது அந்த நரி" என்று வலையில் மாட்டிக் கொண்ட மான் வருத்தத்துடன் சொல்லியது;

"நான் ஏற்கனவே உன்னிடம் தெளிவாகச் சொல்லி இருந்தும், அதன் பேச்சை நீ கேட்டுவிட்டாய்: 'என்னிடம் குற்றமில்லை' என்று ஒருவனை நம்பிச் செல்லக் கூடாது; மரணத்தை நெருங்குபவர், நண்பர் சொல்லும் இடத்தை விடமாட்டான்" என்றது காகம்; நம் முகத்துக்கு முன்னர் நல்ல வார்த்தை கூறிவிட்டு, பின்னால் போய் தீங்கு செய்வர்; இவர்களின் உறவை கைவிட வேண்டும்; தீயவனின் நாக்கின் நுனியில் தேன் இருக்கும்; நெஞ்சில் நஞ்சிருக்கும்;

அங்கு வயலுக்கு சொந்தக்காரன் வந்துவிட்டான்; காகம் ஒரு தந்திரம் செய்தது; மானை, அது இறந்ததுபோல நடிக்கச் சொல்லிற்று; அந்த மானின் கண்களைக் கொத்துவதுபோல, காகம் அந்த மானின் கண்ணை கொத்தியது; அதைக் கண்ட வயற்காரன் வந்து இறந்த மானின் மேல் கிடந்த வலையை பிரித்து எடுத்துக் கொண்டு சென்றான்; உடனே காகம் குரல் கொடுத்தது; உடனே மான்  எழுந்து ஓடி தப்பிவிட்டது; நரியும் ஏமாந்தது;

ஒருவன் தான் செய்த புண்ணிய பாவங்களின் பயன்களை மூன்று வருடத்திலாவது மூன்று மாதங்களிலாவது மூன்று நாளிலாவது அனுபவிப்பான்; அதுபற்றி, உணவாக இருக்கும் பிராணிக்கும், அதனை உண்ணும் பிராணிக்கும் இடையிலே நிகழும் நட்பானது கேட்டுக்கே காரணம்"
**


No comments:

Post a Comment