கந்தரனுபூதி-46
எந்தாயும் எனக்கு
அருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை
தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே
உமையாள்
மைந்தா குமரா மறை
நாயகனே.
(என் தாயும், என் அருள் தந்தையும் ஆக நீ இருக்கிறாய்! என்
சிந்தையின் குழப்பங்களை தீர்த்து என்னை ஆட்கொள்வாய்! கந்தா! கதிர்வேலவனே!
உமையாளின் மைந்தனே! குமரா! மறை என்னும் வேதங்களுக்கு நாயகனே!)
எந்தா யுமெனக் கருடந்
தையுநீ
சிந்தா குலமா
னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே
யுமையாண்
மைந்தா குமரா மறைநா
யகனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-46)
**
No comments:
Post a Comment