பிரஜாபதி என்பவர்கள் பிரம்மாவால் படைக்கப்பட்டவர்கள்; பிரம்மாவின் படைப்புத்
தொழிலைச் செய்வதற்காக இவர்கள் படைக்கப்பட்டார்களாம்; மொத்தம்
10 பிரஜாபதிகள் உள்ளனர்; மரீசி, அத்திர,
அங்கிரசர், புலஸ்தியர், புலகர்,
கிருது, வசிஷ்டர், தக்கன்,
பிருகு, நாரதர் ஆகியோர்; (மகாபாரதக் கதைப்படி மேலும் சிலரும் பிரஜாபதிகளே! அவர்கள், நாரதர், காசிபர், கௌதமர்,
பிரஹலாதர், கர்த்தமர் ஆகியோர்);
பிரம்மா:
மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்; படைக்கும் தொழிலைச்
செய்பவர்; (மும்மூர்த்திகளில் மற்ற இருவர், திருமால், சிவன்); பிரம்மாவின்
மனைவி சரஸ்வதி; சரஸ்வதியை கலைமகள் என்பர்; பிரம்மாவும், சரஸ்வதியும் சத்ய லோகத்தில்
வசிக்கின்றனர்; பிரம்மாவுக்கு நான்கு தலைகள், நான்கு கைகள்; இவர் அன்னப்பறவையில் அமர்ந்திருப்பார்;
இவருக்கு நான்கு முகங்கள் இருப்பதால் "நான்முகன்" என்று
கூறுகின்றனர்;
பிரம்மா,
நான்கு யுகங்களான கிரேத யுகம், திரேதயுகம்,
துவாபர யுகம், கலியுகம் என மொத்தம் 43,
20,000 ஆண்டுகள் கொண்ட இரண்டாயிரம் நான்கு
யுகங்கள் என்னும் சதுர்யுகங்கள் முடிந்தால், பிரம்மனின்
ஆயுளும் முடியும்; திருப்பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து தோன்றிய சரஸ்வதியை மணந்து கொண்டார்; பிரம்மா,
தன் மனோசக்தியால், பிரஜாபதிகளை படைத்துக்
கொண்டார்; அவர்கள் மூலமே படைத்துத் தொழிலை தொடங்கினார்;
திருமாலுக்கும்,
பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்று போட்டியாம்; அதனால் சிவனிடம் சென்று கேட்டுள்ளனர்; அவர் தன்
முடியை பிரம்மாவைப் பார்த்து வர அனுப்பினார்; பிரம்மா தன்
வாகனமான அன்னப் பறவையில் சிவனின் முடி தேடிச் சென்றார்; விஷ்ணுவை,
சிவனின் பாதத்தைப் பார்த்து வர அனுப்பினார்; அவர்
வராக அவதாரம் எடுத்து., பூமியைக் குடைந்து கொண்டு சென்றார்;
இவரும் தோல்வி கண்டனர்;
இருந்தாலும், சிவனின் முடியைப்
பார்த்து அவர் தலையில் இருந்த தாழம்பூவை எடுத்த வந்ததாகப் பொய் சொன்னார்; எனவே பிரம்மனுக்கு வழிபாட்டுக் கோயில் இல்லை என்று சாபமிட்டார் சிவன்;
அந்த தாழம்பூவும் பொய் சொன்னதால், அதையும்
சிவன் தன் பூஜைக்கு ஏற்றுக் கொள்வதில்லையாம்; மற்றொரு
கதையும் உண்டு, சிவன் கோபப்பட்டு, பிரம்மாவின்
ஐந்து தலைகளில் ஒன்றை கொய்து எடுத்துவிட்டார் என்றும், அதனால்தான்,
பிரம்மாவுக்கு நான்கு தலைகள் மட்டும் உள்ளதாகச் சொல்வர்; சிவன் அவ்வாறு ஒரு தலையை வெட்டியதால், கொலை பாவமான,
பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம்;
தட்சன்:
பிரம்மாவின் 10 புத்திரர்களில் தட்சனும் ஒருவர்; தட்சனின் மனைவி பெயர்
பிரசுதி; இவர்களுக்கு பல மகள்கள் உள்ளனராம்; அவர்கள்: அதிதி, திதி, தனு,
கலா, தனயு, சின்ஹிகா,
குரோதா, பிரதா, விஸ்வா,
வினதா, கபிலா, முனி,
கத்ரு, தாட்சாயிணி, ரேவதி,
ரதி, மற்றும் கார்த்திகை உட்பட 27
நட்சத்திரங்கள்; ஆக மொத்தம் தட்சனுக்கு 60 பெண்கள்
(புத்திரிகள்);
தாட்சாயிணி:
இதில் தட்சனின் ஒரு மகள் பெயர் தாட்சாயிணி; இவள் தானே
முடிவெடுத்து, சிவனை மணந்து கொள்கிறாள்;
தட்சனின் பெண்களில் 10 பேரை எமனுக்கு திருமணம் செய்து
கொடுக்கிறார்; 13 மகள்களை காசியப முனிவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்; 27 பெண்களை சோமன் என்று சொல்லும் சந்திரனுக்கு திருமணம் செய்து
கொடுக்கிறார்; ரதி என்ற பெண்ணை மன்மதன் என்பவனுக்கு திருமணம்
செய்து கொடுக்கிறார்; மற்ற பெண்களை முனிவர்களுக்கு திருமணம்
செய்து கொடுக்கிறார்;
தட்சன் மகள் அதிதியின் வாரிசுகள் ஆதித்தியர்கள்;
தட்சன் மகள் திதியின் வாரிசுகள் - தைத்தியர்கள்;
தட்சன் மகள் தனுவின் வாரிசுகள் - தானவர்கள்;
தட்சன் மகள் அரிஷ்டாவின் வாரிசுகள் - கந்தர்வர்கள்;
தட்சன் மகன் காசாவின் வாரிசுகள் - யட்சர்கள்;
தட்சன் மகள் சுரபியின் வாரிசுகள் - பசுக்கள், எருமைகள்;
தட்சன் மகள் வினிதாவின் வாரிசுகள் - கருடன்கள்;
தட்சினின் மகள்கத்ருவின் வாரிசுகள் - பாம்புகள்;
தட்சனின் மகள் முனியின் வாரிசுகள் - அரம்பையர்கள்;
தாட்சாயிணி:
பிரம்மாவின் மகனான தட்சனின் மகள்கள் 60 பேரில் இந்த
தாட்சாயிணியும் ஒருவர்; தன் தந்தை பேச்சைக் கேட்காமல், இவர், சிவனை திருமணம் செய்து கொண்டார்; தட்சனுக்கு சிவனின்
மீது கோபம்; எனவே அவரை அடக்க நினைத்து, யாகம் ஒன்றை தட்சன் நடத்துகிறார்; மருமகனுக்கு
அழைப்பு அனுப்பவில்லை; நியாயம் கேட்கச் சென்ற மகள்
தாட்சாயிணி அந்த யாக நெருப்பில் விழுந்து இறக்கிறார்; சிவன்,
இறந்த தாட்சாயிணி உடலை தூக்கிக் கொண்டு அலைவதைப் பார்த்த திருமால்,
அந்த உடலை தன் சக்கராயுதத்தால் தகர்த்து பல பகுதிகளாக சிதைக்கிறார்;
அது பிரிந்து இந்த பூமியில் பல இடங்களில் சிதறி விழுகிறது; அந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக இருக்கின்றதாம்;
பார்வதி:
மலை அரசன் இமவான் என்பவரின் மகள் இந்த பார்வதி; பிள்ளையார், முருகனின் தாய் இவர்தான்; திருமாலின் தங்கை என்றும்
கூறப்படுகிறார்; மூன்று தேவியர்களான திருமகள் என்னும்
லக்ஷ்மி, கலைமகள் என்னும் சரஸ்வதி இவர்களுடன் சிவனின்
மனைவியான பார்வதி மலைமகள் என்று அழைக்கப் படுகிறார்; இவரே
சிவனுடன் இணைந்து சிவசக்தியாக விளங்குவதாக இந்து மதம் கூறுகிறது; மலை என்றால் பர்வதம் என்று பெயர்; மலை மகள் என்பதால்
பார்வதி என்று பெயர்;
சிவன்:
சிவன் என்றால் சிவந்தவன் என்று பொருளாம்; சேயோன் என்றும் பெயர்;
சிவன் அகங்காரத்தை அழிப்பவன் என்ற முறையில் "அழிக்கும்
கடவுளாக" கருதப்படுகிறாராம்;
சிவன் அழிவில்லாதவன்;
ஆதியில் அவன் மட்டுமே இருந்தான் என்றும், அவன்
தன் இடப்பாகத்தை சக்தி உருவாக்கி பிரித்தான் என்றும், இருவரும்
ஆனந்த தாண்டவம் ஆடி, அண்ட சராசரங்களை உருவாக்கினர் என்றும்
நம்பப் படுகிறது; முடிவு நாளில் ஊழித்தாண்டவம் ஆடி
எல்லோரையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கிறார் என்றும் நம்பப்படுகிறது;
**
No comments:
Post a Comment