கந்தரனுபூதி-10
கார் மாமிசை காலன்
வரின் கலபத்து
ஏர் மாமிசை வந்து
எதிரப் படுவாய்
தார் மார்ப வலாரி
தலாரி எனுஞ்
சூர் மாமடியத் தொடு
வேலவனே.
(கார் என்னும்
கருமையான மாமிசை என்னும் எருமையின் மீது காலன் என்னும் எமன் வரும்போது, கலப மயில் மீது ஏறிவந்து எதிரில் நிற்பாய்! தார்
என்னும் மலைகளை அணிந்த மார்பை உடையவனே! வலாரி என்னும் சூரபர்மன் மறைந்திருந்த
மாமரத்தையை அழித்த வேலவனே!)
கார்மா மிசைகா
லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந்
தெதிரப் படுவாய்
தார்மார் பவலா ரிதலா
ரியெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே
லவனே.
(அருணகிரிநாதரின்
கந்தரனுபூதி பாடல்-10)
**
No comments:
Post a Comment