Wednesday, March 9, 2016

கந்தரனுபூதி-8


கந்தரனுபூதி-8

அமரும் பதிகேள் அகமாம் எனும் இப்
பிரம்மம் கெட மெய்ப்பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொருதானவன் நாசகனே.

அமரும் பதியே கேள்! அகம் என்னும் உள்ளமானது, இந்த பிரம்மம் மயங்கி கெடும்படி, மெய்பொருள் என்னும் உண்மைப் பொருளான ஆன்மாவைப் பேசிய குமரனே! கிரிராசன் என்னும் மலை அரசனின் குமாரத்தியான பார்வதியின் மகனே! சமரம் என்னும் போரிட்டு நாசக்காரர்களை அழித்தவனே!

(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-8)

**

No comments:

Post a Comment