Wednesday, March 9, 2016

கந்தரனுபூதி-7


கந்தரனுபூதி-7

கெடுவாய் மனனே கதி கேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே.

கெட்டுப் போக நினைக்கிற மனமே! கேட்பாயாக மனமே! கேட்பவருக்கு கொடுப்பாயாக! வடிவேலனான இறைவனின் பாதங்களை நினைத்து வணங்கி வருவாயாக! நெடுங்காலமாக வரும் பிறவித் துன்பம் என்னும் வேதனையை சுட்டு எரிப்பாயாக! முன்வினைகள் யாவையும் விடுவிப்பாய் விடுவிப்பாயாக!

(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-7)

**

No comments:

Post a Comment