கந்தரனுபூதி-9
மட்டூர் குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டு ஊசல்படும் படர் என்று ஒழிவேன்
தட்டு ஊடற வேல் சயிலத்தெரியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.
மட்டூர் குழல் என்னும் மங்கையரின் கூந்தல்
அழகில் மயங்கி, அந்த வலையில் சிக்கி, ஊசல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த துன்ப வலையிலிருந்து
என்றைக்கு நான் ஒழிவேன்? தட்டுத் தடைகள் இன்றி, ஊருருவிச் செல்லும் வேல் ஆயுதம்
தெரியும் நிட்டூர என்னும் துன்பம் நீக்கும் பெருமானே!
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி
பாடல்-9)
**
No comments:
Post a Comment