Saturday, December 27, 2014

புல்லின்வாய் கீண்டானை


புல்லின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை | 
கில்லிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் | 
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் | 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று | 
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் | 
குள்ளக் குளிரக் குடைந்து நீர் ஆடாதே | 
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் | 
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்.

Friday, December 26, 2014

கனைத்திளங் கற்றெருமை

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

Thursday, December 25, 2014

கற்றுக் கறவை

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!

Wednesday, December 24, 2014

தூமணி மாடத்து...

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்! 
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் 
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ 
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ 
மாமாயன் மாதவன்  வைகுந்தன் என்றென்று 
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

Monday, December 22, 2014

கீழ்வானம் வெள்ளென்று...

கீழ்வானம் வெள்ளென்று எறுமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய பாவாய் எழுந்திறாய் பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந் தருளாலோ ரெம்பாவாய். (திருப்பாவை)

Sunday, December 21, 2014

புல்லாகிப்

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்! எம்பெருமான்!

Friday, November 28, 2014

விரதங்கள்


மகா சிவராத்திரி விரதம் = மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் இந்த விரதம்.

பிரதோஷம் = வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் 13-ம் நாளான திரயோதசியில் சூரியன் மறையும் முன்னர், மூன்றே முக்கால் நாழிக்கு மேல் அதற்கு அடுத்த மூன்றே முக்கால் நாழிகைக்குள் இடைபட்ட புண்ணிய காலம்தான் பிரதோஷம்.
சனிப்பிரதோஷம் என்பது ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி மாதங்களில் வரும்.

கேதார விரதம் = புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதி முதல் அடுத்த தேய்பிறை சதுர்த்தசி திதி வரை உள்ள 21 நாட்கள்.
அல்லது, தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி திதிவரை உள்ள 14 நாட்கள்.
அல்லது, தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரை உள்ள 7 நாட்கள்.
அல்லது, தேய்பிறை சதுர்த்தசி ஒரு நாள் மட்டும்.





படமாடக் கோயில்...

"படமாடக் கோயில் பகவற்கொன் றீகீல்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீகில்
படமாடக் கோயில் பகவற்க தாமே"

--திருமந்திரம்.

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
(திருமூல நாயனார், திருமந்திரம்)


ஒரு வார்த்தை போதுமே!

ஒரு வார்த்தை போதுமே!

"யாவர்க்கு மாமிறை வர்க்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே."

இறைவனை வழிபட ஒரேயொரு பச்சை இலை போதும்!
அதுபோல, பசுவின் பசியாற்ற ஒருவாய் உணவு போதும்;
அதுபோல, பிறரின் பசியாற்ற, நாம் உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி  போதும்;

அதுபோல, பிறர் நம்மிடம் எதிர்பார்ப்பது, ஒரேயொரு "அன்பான" வார்த்தையே;

Wednesday, November 26, 2014

நீர்! நீர்!!


நீர்நிலை = படுகர்தாங்கல்கேணிபல்வலம்படு,பட்டம்மடுஉவளகம்
பண்ணைவாவிசுனைவட்டம்,தடம்கயம்பயம்தடாகம்
குளம்குட்டம்கிடங்கு,சூழிஅலந்தைகுண்டம்பங்கம்இலஞ்சி
கோட்டகம்,பொய்கைஎல்வைஓடைஏரி.

தெளிந்தநீர் = சற்சலம்.
ஆற்றின் இடை = இலங்கைதுருத்திஅரங்கம்.
நீர்க்குமிழி = துரைமொக்குள்பௌவம்புற்புதம்,கொப்புள்.
நுரை = பேனம்.
நீர்ச்சுழி = உந்தி.
வெள்ளம் = பிரளயம்வாரிநீத்தம்பெருக்குஓதம்,ஓகம்.
நிறைபுனல் = வழாறுபிராறு.
நீந்துபுனல் = அகாதம்.
கலங்கனீர் = கலுழிஆவிலம்.
ஆழம் = குண்டுஅழுந்துகயம்கம்பீரம்.
நீரோட்டம் = கோலம்.
கிணறு = கூபம்கூவல்அசும்பு.
ஊறுபுனல் = (ஊறும் நீர்) அஃகிஉறவிஊற்று.
ஊரார் உண்ணும் நீர் = ஊருணி.


நிலம்! நிலம்!!



மலை சார்ந்த நிலம் = குறிஞ்சி.
வனம் சார்ந்த நிலம் = முல்லை.
நாடு சார்ந்த நிலம் = மருதம்.
கடல் சார்ந்த நிலம் = நெய்தல்.
பாலைவனம் சார்ந்த நிலம் = பாலை.

திகட சக்கரச்..


திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.