Showing posts with label திருஞானசம்மந்தர். Show all posts
Showing posts with label திருஞானசம்மந்தர். Show all posts

Friday, March 25, 2016

வடிவுடை வாள் தடங்கண் உமை...

வடிவுடை வாள் தடங்கண் உமை
அஞ்சவோர் வாரணத்தைப் 
பொடியணி மேனி மூட உரி
 கொண்டவன் புன்சடையான்
கொடி நெடு மாடம் ஓங்கும்
குழகன் குடமூக்கிடமா
இடிபடு வானம் ஏத்த இருந்தானவன்
எம்மிறையே!”

(அழகிய வாள் போன்ற கூரிய விழிகளை உடைய உமையான பார்வதியே அஞ்சும்படி, யானை வடிவ அரக்கனை கொன்று தன் மேனியில் போர்த்திக் கொண்டவன், உடலெல்லாம் திருநீறு அணிந்த ஜடாமுடி தரித்த சிவன்! உயர்ந்த மாடங்கள் சூழ்ந்த குடமூக்கு எனும் கும்பகோணத்தில் குடியிருக்கிறார்; இடிக்கும் வானத்தின் தேவர்கள் போற்றி வணங்கும் எமது இறைவன்!)
(ஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்)
**



Saturday, March 19, 2016

பூம்பாவை திருப்பதிகம்


 பூம்பாவை திருப்பதிகம்
(மயிலாப்பூரில் திருஞான சம்மந்தர் அருளியது)
(இது, மிகவும் உடல்நலம் இல்லாமல் இருப்பவரைக் குணப்படுத்தும்)

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!

மைப்பயந்த ஒண் கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்!

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண் மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகை நாள்
தளைத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்!

ஊர்திரை வேலையுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேவ்வல்லார் கொற்றகொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையோர் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்!

மடலார்ந்த் தெங்கின் மயிலையார் மாசிக
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் அனேறு ஊரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!

மலிவிழாவீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல் செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!

தண்ணா அரக்கன்தோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினென் கணங்கள் தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்!

நற்றா மறை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்கள் ஏத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்!

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம்புகழ்ந்த பத்தும் வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே!
(திருச்சிற்றம்பலம்)
**


Thursday, February 18, 2016

கோளறு பதிகம்

கோளறு பதிகம்
(திருஞானசம்மந்தர் அருளியது)

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
      ஏருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடேழு பதினெட்டொடு ஆறும்
      உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
      அடியா ராவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
      உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
      திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
      கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
      விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
      மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

வாள்வரி யதளதாடை வரிகோண வணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
      கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
**





Tuesday, February 16, 2016

திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம்

திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகம்

மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையிலுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

முத்திதருவது நீறு முனிவரணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர்புகழ்வது நீறு
பத்திதருவது நீறு பரவ இனியது நீறு
சித்திதருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந்தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக்
கெல்லாம் ஆசைகெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.

அருத்தமதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர்பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகைசூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

எயிலதுவட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே.

இராவணன்மேலது நீறு எண்ணத்தகுவது நீறு
பராவணமாவது நீறு பாவமறுப்பது நீறு
தராவணமாவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்குந் திரு மேனி ஆலவாயான் திருநீறே.

மாலொடயனறி யாதவண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந்தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம்மால வாயான் திருநீறே.

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங்கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவாயான்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான்சம்மந்தன்
தேற்றித் தென்ன்னுடலுற்ற தீப்பிணி யாயினதீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
**

திருஞானசம்பந்தர் தேவாரம்


திருஞானசம்பந்தர் தேவாரம்

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றா தென்நாக்
கைமல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

கையது வீழினுங் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை யுருவழிய
அப்படி யழலெழ விழித்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழல்அலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ண்ணுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.

அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.
**



திருஞானசம்பந்தரின் பூம்பாவை திருப்பதிகம்

திருஞானசம்பந்தரின் பூம்பாவை திருப்பதிகம்

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்!

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்!

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்திரு சோலைக் கபாலீச் சரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம்அமர்ந்தான்
நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்!

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
அடல் ஆனேறு ஊரும் அடிகளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!

தண்ணா அரக்கன்தோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்!

நற்றா மரைமலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்!

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரம்அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

கானமர் சோலைக் கபாலீச் சரம்அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.
**