வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி
வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
(சிவபுராணம்)
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி
வெல்க!
(என் மனத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்தி (கெடுத்து) என்னை ஆண்டு கொண்ட என்
தலைவன் திருவடி வெற்றி பெறுக!)
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
(பிறவி என்னும் இந்த உயிர் மறுபடியும் மறுபடியும் பிறந்து பல பிறவிகள் தொடராமல் அறுத்து, மாற்றுகின்ற, என் இறைவனான சிவபெருமானின் (பிஞ்ஞகன்) வீர
கண்டை அணிந்த உன் திருவடிகள் வெற்றி பெறுக!)
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
(உன் மீது அன்பில்லாத மற்றவர்களுக்கு எட்டாதவனான (சேயோன்) என் இறைவனான உன்
பூப்போன்ற திருவடிகள் வெற்றி பெறுக!)
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
(உன்னை கைகூப்பி வணங்குபவர்களுக்கு, அவர்களின் உள்ளத்தே நினைத்து நினைத்து
மகிழ்கின்ற என் இறைவனின் திருவடிகள் (கழல்கள்) வெற்றி பெறுக!)
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
(தலைமேல் கைகூப்பி வணங்குபவர்களை உயர்த்துகின்ற, சிறப்புடைய (சீரோன்) உன்
திருவடி வெற்றி பெறுக!)
**
No comments:
Post a Comment