Friday, October 16, 2015

பிரம்மா (Brahma)

பிரம்மா:
இந்த உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கு காரணமானவர் இந்த பிரம்மா; சிவன் கடவுளாகவும், பிரம்மா படைக்கும் தொழிலைச் செய்பவராகவும் சொல்கிறார்கள். இந்த உலகம் தோன்றி மறையக்கூடியது. நிலை இல்லாதது. எனவே ஒவ்வொரு உலகம் தோன்றும் போதும் ஒவ்வொரு பிரம்மா தோன்றுவார் என்கிறார்கள். இந்தப் பிரபஞ்சமானது தோன்றி, இருந்து, பின்னர் சிவனில் ஒடுங்கி மறையும் தன்மை கொண்டதாம். பின்னர், அந்தச் சிவனிலிருந்து புதிய பிரபஞ்சம் தோன்றுமாம்.
ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிர்களைத் தோற்றுவிப்பது அந்தந்த பிரபஞ்சத்தில் உள்ள பிரம்மாக்கள். இவரைப் பொதுவாக பிரம்மா என்று கூறுகிறார்கள். இந்த பிரம்மாவின் துனைவிதான் சரஸ்வதி.
இந்த பிரம்மா படைப்பைப்பற்றி ஒரு வேடிக்கை கதை மூலம் அந்த விஞ்ஞானத்தை விளக்குகிறார்கள்.
தான்தான் இந்த பிரபஞ்சத்தையே படைக்கு பிரம்மா, என்று அந்த பிரம்மா, பிரமிப்பாக நினைத்து கர்வம் கொண்டாராம். இது சிவனுக்கு கோபத்தை உண்டாக்கி விட்டதாம். அவரின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து வைரவக் கடவுள் தோன்றினாராம். அந்த வைரவக்கடவுள் நேராக பிரம்மாவிடம் சென்று, அவரின் ஒரு தலையை வெட்டி விடுகிறார். பிரம்மாவுக்கு ஏற்கனவே ஐந்து தலைகள் இருந்ததாம். ஒரு தலை, வெட்டப்பட்டபின்னர், இப்போது பிரம்மாவுக்கு நான்கு தலைகள் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் பிரம்மாவை "நான்முகன்" (நான்கு முகங்கள் கொண்டவன்) என்று சொல்கிறார்களாம். இவரை சதுர்முகன் (நான்கு முகம்) என்றும் சொல்வார்களாம்.
இந்த பிரம்மா சில சமயங்களில், அவரின் படைப்புத் தொழிலை மறந்தும் விடுவாராம். அப்படி மறந்த நேரத்தில் ஒரு முறை, சிவனை வழிபட்டு, அவரே தமக்கு மகனாப் பிறந்து, மற்ற உயிர்களின் சிருஷ்டி என்னும் பிறப்பை தொடர்ந்தார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.
சிவனின் புத்திரர் சுப்பிரமணியக் கடவுள் ஒரு முறை இந்த பிரம்மா சிருஷ்டி மந்திரத்தை சொல்ல மறந்துவிட்டார் என்ற காரணத்தை வைத்து, பிரம்மாவை சிறையில் அடைத்து வைத்துவிட்டாராம். சுப்பிரமணியக் கடவுளே, பிரபஞ்சத்தின் உயிர்களை உருவாக்கும் சிருஷ்டி வேலையைச் செய்தார் என்கிறது கந்தபுராணம்.
ஒவ்வொரு பிரம்மாவும், இந்த பிரபஞ்சம் அழியும் காலமான மகாபிரளயம் வரும்போது இந்த பிரபஞ்சம் முழுவதும் அழிந்து விடுமாம். பிரம்மாவும் அழிந்து விடுவாராம். அதாவது இந்த பிரபஞ்சம் சிவனில் (black hole) பிரபஞ்சத்தின் மையப்பகுதியில் ஒடுங்கிவிடுமாம், அதாவது இந்தப் பிரமாண்ட பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஒடுங்கி அடங்கிவிடுமாம். அது மறுபடியும் அங்கிருந்தே புதிதாகத் தோன்றி, இந்த பிரபஞ்ச அளவுக்கு விரிந்தும் விடுமாம். அப்போது இந்த உயிர்களைப் படைப்பதற்காக புதிய பிரம்மாவும் பிறப்பாராம்.
இதை இப்படி வேடிக்கையாக சொல்கிறார்கள் புராணங்களில்:-
ஒவ்வொரு பிரம்மாவின் முடிவிலும் அவரின் தலையைக் கொய்து, அந்த பிரம்மாவின் மண்டை ஓட்டை எடுத்து, சிவன் ஒரு கயிறில் கோர்த்து தன் கழுத்தில் அணிந்து கொள்வாராம். ஒவ்வொரு பிரபஞ்ச முடிவிலும் இது நடப்பதால், சிவனின் கழுத்தில் பல மண்டை ஒடுகள் உள்ளன. அதைக் கொண்டே இதுவரை எத்தனை பிரபஞ்சங்கள் அழிந்தன என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இதை எதற்காகச் சொல்கிறார்கள் என்றால் -- இந்த பிரபஞ்சம் நிரந்தரமானது அல்ல; இது தோன்றி மறையும் இயல்புடையது; ஆனால் நிரந்தரமானவன் சிவன்; அவனே நிலையானவன்; எப்போதும் அழியாது எஞ்சி நிற்பவன் சிவன் என்னும் கடவுள் ஒருவனே என்ற விஞ்ஞான உண்மையை உணர்த்தவே இவ்வளவு புராண கதைகளும்.

**

Thursday, October 15, 2015

திருவிளையாடல்-1

திருவிளையாடல்-1
மதுரையில் சிவன் செய்த விளையாட்டுக்கள் திருவிளையாடல் எனப்படும்.
1-வது திருவிளையாடல்:
இந்திரனைக் கொல்லும்படி விருத்திராசுரன் என்பவனை ஏவி விடுகிறார் துவஷ்டா. இந்த துவஷ்டாவின் மகனைக் கொன்றவனை பழிவாங்கும் பொருட்டு யாகம் நடத்தி, இதில் இந்த விருத்திகாசுரனை உருவாக்கி இந்திரனைக் கொல்லுமாறு அனுப்புகிறார். ஆனால், அந்த விருத்திகாசுரனை இந்திரன் கொன்று விடுகிறார். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. (தேவர்கள் யாரையாவது கொலை செய்தால் இந்த பாவம் வந்துவிடும்; இதற்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டுமாம்). எனவே இந்திரனுக்கு இந்தப் பாவம் வந்ததால் அவன் ஒளி இழந்து தெளிவின்றி இருக்கிறாராம். எனவே அவ்வாறு தெளிவில்லாமல் அலைந்து திரிந்தபோது, வழிதவறி கடம்பவனம் என்னும் பகுதியை அடைகிறாராம். (கடம்பவன்தான் பழைய மதுரை). அங்கு சிவனை கண்டு அவரிடம் தனக்கு அருள் புரியுமாறு வேண்டுகிறார். சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக பூக்களைத் தேடுகிறார் இந்திரன். பூக்களை எங்கும் பார்க்க முடியவில்லை. அங்குள்ள ஒரு குளத்தில் மட்டும் பொன்னால் ஆக தாமரை மலர்கள் (பொற்றாமரை) பூத்திருக்கின்றன. அந்த பொற்றாமரை மலர்களை சிவனே தோற்றுவித்து முதல் திருவிளையாடலை நடத்தி இருக்கிறாராம்.
இந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் சண்டை. இருவரும் மற்போர் புரிகிறார்கள். இந்திரன் தோற்று விட்டார். தப்பித்து ஓடி, விஷ்ணுவிடம் தஞ்சம் புகுந்து விட்டார். அவரிடம் தன்னை காப்பாற்றும்படி வேண்டுகிறார். அவர் கடலில் தவம் செய்யும் ஒரு முனிவரை போய் வேண்டி உன் உடம்பையும் உயிரையும் காப்பாற்றிக் கொள் என்று கூறுகிறாராம். அந்த முனிவரை இந்திரன் சந்திக்கிறார் தன்னைக் காப்பாற்றும்படி கேட்கிறார்.
முனிவரோ--
"இந்த உடம்பைக் காப்பாற்றி என்ன செய்யப் போகிறாய்; எதற்காக இப்படி பயந்து சாகிறாய்; இந்த உடம்பில் உயிர் பிரிந்துபின்னர், அந்த உடல் வீட்டில் கிடந்தால் உன்னைப் பெற்றவர்கள் இது தனக்குத்தான் சொந்தம் என்பர்; காட்டில் கிடந்தால், நாய், நரிகள் தங்களுக்குச் சொந்தம் என சொந்தம் கொண்டாடும்; பிணியால் கிடந்தால் யமனும், பேயும் தங்களுக்குச் சொந்தம் என கொண்டாடுவர்; இப்படிப்பட்ட உடம்பை நீ உனக்குச் சொந்தம் என்று கொண்டாடி அதைக் காப்பாற்ற வருகிறாயே? உண்மையில் இந்த உடம்பு யாருக்குச் சொந்தம்? சொல் பார்க்கலாம் என்று கேள்வியை எழுப்புகிறார். உண்மையில் இந்த உடம்பானது, துன்பப்படுபவர்களுக்கு உதவுவதற்காக இறைவன் படைத்திருக்கிறான். எனவே என் உடம்பு எதற்கும் பிரயோசனப்படாது; எனவே என் உடம்பை எடுத்துக் கொள்; அதிலுள்ள எலும்புகளைக் கொண்டு சண்டையிட்டு உன் எதிரி விருத்திராசுரனைக் கொல் என்று அறிவுறுத்துகிறார். அவ்வாறே இந்திரனும் அந்த முனிவரின் உடம்பில் உள்ள எலும்புகளை வைத்து, எதிரியை கொன்று அழிக்கிறான். அதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. அதற்குப் பரிகாரம் தேடிய போதுதான் சிவன் பொற்றாமரை மலர்களை ஏற்படுத்தி அதைக் கொண்டு இந்திரன் சிவனை அர்ச்சனை செய்து அவனின் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்கிறாராம்.
**



சிரார்த்தம்

சிரார்த்தம்:
சிரார்த்தம் என்பது பிதிர் கன்மம் அல்லது பிதிர் கார்யம்.
பிதுர்தேவதைகளுடைய திருப்திக்காக செய்யப்படும் பிண்ட கருமம். 
இது சுபமாகச் செய்யும் சுபகாரியமாகவும், அசுப-கர்மமாகவும் செய்யப்படும். 
சுப-கர்மத்தில் செய்யும் சிரார்த்தம் 'நாந்தி' 'அப்பியுதம்' என்று இரண்டு வகை உண்டாம்
அசுப-கருமத்தில் செய்யப்படும் சிரார்த்தம் 'நேகம்' என்றும் பெயர்.
அவற்றுள், பிரேத சிரார்த்தம் என்பது பிரேத திருப்தியின் பொருட்டு செய்யப்படுவது.
பைதிருக சிரார்த்தம் பிதிர்தேவதைகளின் பொருட்டு செய்யப்படும். 
காசி, கயை, பிரயாகை, குருக்ஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புஷ்கலக்ஷேத்திரம், முதலியன சிரார்த்த கார்யங்களுக்கு சிறந்த புண்ணிய இடங்களாம். இவற்றில் கயாவில் செய்வது மிகுந்த பலனளிக்குமாம். 
இறந்த தினம், அமாவாசை, மகாளயபக்ஷ முதலிய நாட்கள் இந்த சிரார்த்தத்துக்கு உரிய காலங்களாம்.
**


Wednesday, October 14, 2015

விந்திய மலை

அகத்தியர் பாரதத்தின் தென்திசை பகுதிக்கு வருகிறார். அப்படி அவர் வரும்போது --
கங்கையிடம் சென்று, தனக்கு காவிரியைக் கொடுக்கும்படி கேட்டு வாங்கிக் கொள்கிறாராம்; 
ஜமதக்கினி முனிவரிடம் சென்று அவரின் மகன் திரணதூமாக்கினியை தனக்கு சிஷ்யனாகத் தரும்படி கேட்டு வாங்கிக் கொள்கிறாராம்; 
புலத்தியனிடம் சென்று அவரின் தங்கையாகிய லோபமுத்திரையை தனக்கு மனைவியாகக் கொடுக்கும்படி கேட்டு அவரை தன் மனைவியாக ஆக்கிக் கொள்கிறாராம்; 
இவைகளைப் பெற்றுக் கொண்டு விந்திய மலைக்கு வருகிறார். அந்த மலை இவருக்கு வழிவிட மறுக்கிறதாம்; 
உடனே, அதை தன் காலால் அழுத்தி தரை மட்டமாக்கி விட்டாராம்; 
பாரதத்தின் மத்திய பகுதியில் இருப்பது இந்த விந்திய மலைத் தொடர்; 


மித்திரனும், வருணனும்

மித்திரனும் (சூரியனும்), வருணனும் வான வெளியில் சஞ்சரித்தனராம்.  
கடல் மேலே இருவரும் பறந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஊர்வசி வந்திருக்கிறாள். 
அவளைப் பார்த்தவுடன் இவர்கள் இவரும் அவள் அழகில் மயங்கி விட்டார்களாம். 
அவளுடன் கலந்து அதனால் பிறந்தவர்கள்தான் அகத்தியரும், வசிஷ்டரும். 

நாட்டிகல் மைல்- Nautical mile

நாட்டிகல் மைல்- Nautical mile
அமெரிக்காவிலிருந்து ஒரு கப்பல் சென்னைக்கு வந்ததாம். அது போர் கப்பலாம். அதன் நீளம் 387 அடியாம். இதன் வேகத்தை ஒரு மணிக்கு 45 “கடல் மைல்” வேகத்தில் செல்லும் என்று பத்திரிக்கை செய்தி சொல்கிறது. அது என்ன “கடல்-மைல்”? (Nautical mile-  நாட்டிகல் மைல்). பூமியில், தரையில், ரோட்டில் உள்ள நீளத்தை மைல், கிலோ மீட்டர் அளவில் சொல்கிறார்கள். பூமியின் தரையானது ஒரே தட்டையாக இருக்காது. மேலும் கீழும், பள்ளமும், மேடும் கொண்ட பகுதிகள். அதை சம தளத்தில் அளந்து கி.மீ. என்றும் மைல் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் கடல் நீரில், அதன் நீளத்தை அளப்பதற்காக இந்த கடல்-மைல் என்ற அளவை வைத்துள்ளார்கள். ஒரு “கடல்-மைல்” என்பது 6076 அடி நீளம் உள்ள கடல் நீளமாம். இந்தக் கணக்குப்படி பார்த்தால், 45 X 6076 = 2,73,420 அடிகள். ஒரு மைலுக்கு 5280 அடிகள். ஒரு மணிக்கு 45 கடல் மைல் வேகத்தில் அந்த கப்பல் செல்லுமாம். அப்படி என்றால் ஒரு மணிக்கு 2,73,420 அடிகள் கடலில் போகும். (தரையில் ஒரு மைலுக்கு 5280 அடிகள்; அப்படிப் பார்த்தால் மணிக்கு 52 கி.மீ. தரை வேகத்தில் செல்லும் என்று நினைக்கிறேன். கணக்கு தப்பாக இருந்தாலும் இருக்கலாம். எனக்குத் தெரிந்ததை உளறி இருக்கிறேன்.

 **

Sunday, October 11, 2015

தோன்றி நின்று ஒடுங்கும் உலகு

தோன்றி நின்று ஒடுங்கும் உலகு:
இந்த பிரபஞ்சம் என்னும் உலகங்கள் தோன்றி, நின்று இருந்து, பின்னர் அழியும் நிலை உடையதாம்.
"நீல மேனி வாலிழை பாகத்துஒருவன் இருதாள் நிழற்கீழ்மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே." -- ஐங்குறுநூறு
மூன்று வகை உலகும் தோன்றி, நின்று, ஒடுங்கும் உலகு.அவன் தாள் நிழற்கீழ் என்னும் அவன் காலடியில் இந்த மாய உலகுகள் தோன்றி, நின்று, மறைகின்றன.
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்,நிலை பெறுதலும், நீக்கலும்நீங்கலா அலகிலா விளையாட்டு". -- கம்பர்.
"மாயையென் றெருத்தி தன்பால்மனமென்னும் மைந்தன் தோன்றித்
தூயநல் லறிவன் தன்னைத்தோற்றமின் றாக்கி
 வைத்தான்தாயொடு தந்தை மக்கள்தாரமென் றிவர்பால் வைத்தநேயமும் அவன்ற னாலேநிகழ்ந்த்தோர் நினைவு கண்டாய்." --- வில்லிபாரதம்.
உறவு, பாசம் கூட மாயைதானோ!
அர்ச்சுனன் போர்முனையில் நிற்கிறான். சோர்ந்து விட்டான். உறவுகளைக் கொன்று கிடைக்கும் பலன் என்ன? பாட்டனையும், குருவையும் கொல்வதா?

"அர்ச்சுனா! மாயை என்ற பெண் உன் மனதைக் கட்டி போட்டுவிட்டாள். நீயோ, தாய், தந்தை, தாரம், என்று உறவுகளை நினைத்து அழுகிறாய். கிருஷ்ணனாகிய நானோ, உன்னை, உனது பிறவிகள் தோறும் நன்னெறிப்படுத்தி வருகிறேன். பாசத்தை விட்டுவிடு அர்ச்சுனா!"

அர்ச்சுன்னின் மகன் அபிமன்யூ. இவன் சுபத்திரையின் மகன். சுபத்திரை கிருஷ்ணனின் தங்கை. பாண்டவர்களுக்கு அபிமன்யூ என்றால் உயிர்.

போரில், அபிமன்யூ அபாயச் சங்கை ஊத, கிருஷ்ணன் தன்னிடம் சும்மா இருந்த சங்கை எடுத்து ஊத, அபிமன்யூவை அநியாயமாக மாளச் செய்தான்.

அர்ச்சுனனுக்கு தீராத சோகம். மகனைப் பறிகொடுத்த சோகம். அக்கினியில் புக தயாராகிறான். கிருஷ்ணன் அவனைத் தடுக்கிறார். கிருஷ்ணன், அர்ச்சுனனை நேரடியாக கைலாசத்துக்கு அழைத்துகச் செல்கிறார். அங்கு அபிமன்யூவைப் பார்க்கிறான் அர்ச்சுனன். மகன் என்று பாசத்தில் அவனைக் கட்டித் தழுவ விரைகிறான் அர்ச்சுனன். ஆனால், அபிமன்யூ, இவனை யாரோ என்று கருதி, அருவருத்து ஒதுக்குகிறான். பாசவலை இல்லை என்பதை புரிந்து கொள்கிறான். 

இந்த உலகுக்கு திரும்புகின்றனர். இங்கு தன் மகனைக் கொன்றவர்களை கொல்கிறான் அர்ச்சுனன். புத்திர சோகத்தை அது ஒரளவு மறக்கச் செய்கிறது.

பாரத யுத்தம் முடிகிறது. கிருஷ்ணனும் மறைகிறான்.
அர்ச்சுனனால் அதற்கு மேல் இயங்க முடியவில்லை. அர்ச்சுன்னால் தன்னிடம் இருந்த காண்டீபத்தை அசைக்கக் கூட முடியவில்லை. செயல் இழக்கிறான். பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிறான்.

கிருஷ்ணனும் அர்ச்சுனனும் பிறவிகள் தோறும் ஒன்றாகவே இருந்திருக்கின்றனர். ராமனாகவும் லட்சுமணனாகவும் இருவரும் ஒரு பிறப்பில். மற்றொரு பிறப்பில் நரனும், நாரணணுமாக. இதில் கிருஷ்ணனும், அர்ச்சுனனுமாக.

இனி அடுத்த பிறப்பில், அர்ச்சுனன், கண்ணப்பராக, அவன் காளத்தியப்பனாக.

பிறவிகள் தோறும் பாசத்தில் (மாயையில்) சிக்கித் தவிக்கும் இந்த மனதை அதிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டுமாம். 

Saturday, October 10, 2015

Macrocosm, Microcosm (அண்ட பிண்டங்கள்)

அண்ட பிண்டங்கள் ஒரே தன்மை உடையன என்பது தத்துவ சாஸ்திரிகளின் கொள்கை. சோதிட சாஸ்திரத்தில் சிறப்பாக சூரிய சித்தாந்தத்தில் அண்டத்திலுள்ள நவகிரங்களும் பிண்டத்திலுள்ள உறுப்புகளும் ஒப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது அண்டத்தில் உள்ள வான சோதிகளின் குணங்களை, பிண்டத்தில் உள்ள பல அங்கங்கள் வைத்திருக்கின்றன.
சூரியன் ஆத்மா என்றும், சந்திரன் தேகம், மனம் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றன.

ஜென்ம லக்கனத்திற்கு ஐந்தாவது இராசி, புத்திரன், மனம் முதலியவைகளைக் காட்டும். ஐந்தில் இருப்பவன் என்ன கிரகமோ அந்தக் கிரகத்தைக் கொண்டு, ஜாதகரின் மனச் சுபாவத்தை சோதிடர் சொல்ல முடியுமாம். மனதைக் குறிக்கும் சந்திரனுடன் பூமிகாரகன் செவ்வாய் கூடி இருந்தால் பிருதிவியின் குணமாகிய லௌகிக விஷயத்தில் மனச் செல்லும்.

சந்திரனுக்கும் மனதுக்கும் சம்மந்தம் உண்டு. ஏனெனில், Lunatic = in Latin, Luna = Moon. பைத்தியம் என்னும் விசரன் என்ற வார்த்தைக்கு உபயோகிக்கும் பதம் சந்திரன் என்று பொருள்படும் அந்தப் பதத்தை தாதுவாய் வைத்திருக்கிறது. அனுபவத்தில், பைத்தியர்கள் Fullmoon என்னும் பௌர்ணமி நாளில் விசர் அதிகப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு இல்லாவிடில் அவ்வாறு வருவதற்கு அவசியமில்லை. மேலும் அமாவாசை, பௌர்ணமி காலங்களில் கடல் வற்றிப் பெருக்கெடுக்கும்.

சந்திரனை ஒட்டியே ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணப் பொருத்தம் பார்ப்பது.
(நன்றி: சித்தகுமாரன் தத்துவம்)



வேடிக்கைக் கணக்கு

"பதினைந்து தமிழரும் பதினைந்து சோனகரும், ஓர் கப்பலில் ஏறிச் சென்றார்கள்.நடுக்கடலில் புயற்காற்று வீசி ஆரம்பித்தது. ஏறிப் போனவர்களில் பாதிப்பேரை கடலிற் தள்ளினால்தான் கப்பில் மூழ்காது. மீகாமன் (கேப்டன்) தமிழன். எனவே முப்பது பேரையும் விருத்த வடிவில் (வட்ட வடிவில்) நிறுத்தினான். அதில் ஒன்பது பேரில் ஒருவரை கடலில் தள்ளுவதாக சொன்னான். அனைவரும் ஒப்புக் கொண்டனர். கேப்டன் தமிழர்களை காப்பாற்றவும் நினைத்தான். அதற்கு ஏற்றாற்போல எல்லோரையும் வட்ட வடிவில் நிறுத்தினானாம்.
எப்படி நிறுத்தி இருப்பான்? என்பது கணக்கு.

இந்த கணக்கின் விடையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாதாம்.
லத்தீன் மொழியில் ஒரு வாசகம் உள்ளதாம், அதை அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்தக் கணக்கின் விடை தெரியுமாம்.
அது லத்தின் வாசகம்: "Populeam virgam mater regina ferbat"

இந்த லத்தீன் மொழியும் தெரியவில்லை என்றால் அவர்களுக்கு இந்த தமிழ்ப் பாடல்:
"வேதமே பூதஞ்சாதி மேலவன் சூலமொன்றுஆதியு மானைக்கோடு மழகிய தனமுமூன்றுநாதனும் நரியின் காதும் நயனமும் நாவுந்தேர்ந்துபாதையில் வழிமறித்த பதகரைக் கடலிற்றள்ளே."
இந்தப் பாடலின் படி, அதில் சொல்லி உள்ளபடி ஆட்களை நிறுத்த வேண்டுமாம்.

நம்ம ஊரில் சின்னக் குழந்தைகள் விளையாடுமே அந்த விளையாட்டுப் போலத்தான் இதுவும் இருக்கும் என்று தெரிகிறது. ஒவ்வொருவரின் மேலும் கையை வைத்துக் கொண்டு வரும்போது கடைசியாக கையை வைக்க வேண்டியன் தமிழனாக இருக்க மாட்டான். 

பாசுபதம்

வெற்றி அடைவதற்குறிய உபாயங்கள்;
இதை வேதவியாசர், தருமனுக்குச் சொல்கிறார்;

"செஞ்சொற் தருமனே! முழுமுதற் கடவுளாம் பசுபதியை நோக்கி பார்த்தன் பெரும்தவம் புரிந்து, பாசுபதம் என்னும் ஓர் திவ்விய அஸ்திரம் பெற்று வர வேண்டும். அதைக் கொண்டு இத் தானைத் தலைவர்களின் தலைகளைப் போர்முனையில் பனங்காயென உருட்ட வேண்டும். அதற்கானதோர் அரிய பெரிய மந்திரத்தை அருச்சுனன் பெறுவதற்கு இதுவே தக்க தருணம். 
ஐயனே! வேதம் ஓதுதல், உண்டி சுருக்குதல், மஞ்சனமாடுதல் முதலிய விரதங்களைக் கைக்கொண்டு, மனம் அடக்கி, மந்திரம் ஓதி, உமாபதியைத் தியானஞ் செய்து, விரதம் பங்கமுறா வண்ணம் வில்லும், வாளும் ஏந்திச் செல்க. இதோ இவ் வியக்கனுடன் புண்ணிய கிரியாம் இந்திரகீலம் அடைந்து, கடவுளர்க்கு அரசனான வாசவனை (இந்திரனை) முதற்கண் வழிபட்டு அவன் அருளையும் பெறுக.

இந்த உபதேசத்தைப் பெற்றவுடனேயே அவன் வேற்று மனிதனாக மாறிவிட்டான். 

திரௌபதியின் கண்ணீர்

திரௌபதியின் இரு கண்களிலும் கண்ணீர் அரும்பியது. விஜயன் (அர்ச்சுனன்) தவத்திற்குப் புறப்படும் இந்த நேரத்தில் கண்ணீர் உகுத்தல் அமங்கலம் எனக் கருதி கண் இமைக்காமல் நின்று, சில வார்த்தைகளைக் கூறத் தொடங்கினாள்; 
"ஐயனே! கொடிய துரியோதனன் இழைத்த வஞ்சனைச் சேற்றில் அழுந்தி அல்லலுழக்கும் எங்களைக் கைதூக்கிக் கரையேற்றுதல் நுமது கடன். தவம் சித்தி பெறும்வரை என் பிரிவாலாகிய வருத்தம் நும் மனதைச் சிறிதும் அலைக்க வேண்டாம். வீங்கு (மிகுந்து) புகழையும், விசேட சுகத்தையும் விழைந்து, மெய் வருத்தம் பாராது, மேன்மேன் உஞற்றுபவரை இலக்குமி தானே விரும்பிச் சென்று அடைகிறாள். நான்முகக் கடவுளால் உலகப் பாதுகாப்பின் பொருட்டே சத்திரியசாதி படைக்கப்பட்டது. 
சத்திரியன் ஒருவன் தன் கடமையிற் பிறழ்ந்து மானமிழந்து வாழ்தலின் வாழாமை மிக இனிது. நூற்றுவர் எமக்கிழைத்த பொல்லாத் தீங்குகளை நினைக்கவே நெஞ்சம் வேகின்றது. துர்மதி படைத்த துச்சாதனன் மன்னவையில் என் கற்றைக்குழல் பிடித்து இழுக்கும் பொழுது ஐவர் எனக்கு உயிர்த்துணைவராயிருந்தும் (கணவராய் இருந்தும்) நான் ஓர் அநாதை எனக் கண்ணனையன்றோ சரண் புகுந்து மானத்தைக் காக்க வேண்டி இருந்தது. 
சத்திரியன் என்ற சொல்லானது, சாதுக்களைத் துக்கத்திலிருந்து விடுவிப்பனுக்கே பொருந்தும். காரணக் குறிகொண்ட அச் சொல் நும்மிடம் இடுகுறியாகி விட்டது. அப்பழி நும் அசாக்கிரதையால் நும்மைச் சார்ந்ததன்றி, நும் ஆண்மை குன்றியதால் அல்ல. எமக்கு அவன் இழைத்த பரிபவத்தை மனத்திற் கொண்டு, எத்துணை இடையூறு வரினும் பொருட்படுத்தாது, தவத்தை இனிது முடித்து எங்களையும் இவ் ஆபத்தினின்று காத்தருள்க" என்று மனம் நைந்து கேட்டுக் கொண்டாள்.

வேதவியாசர்


பராசர முனிவரின் புதல்வர் வேத வியாசர், அந்தக் காட்டில் பாண்டவர்கள் முன் வருகிறார். பாண்டவர்கள் பதறி வரவேற்று அமர வைக்கின்றனர்.
இந்த மண்ணுலகு உய்ய, நான்கு வேதங்களையும், 18 புராணங்களையும், வகுத்துத் தந்த வேத வியாசரே! நீங்கள் எங்களிடம் வந்து அருளினமைக்கு நன்றி. உங்கள் தரிசனம் என்பது வானத்தில் முகிலின்றி மழை தோன்றியதற்கு ஒப்பாகும்.அப்படிப்பட்ட மழையை இந்த மண்ணில் இருப்பவர்கள் நல்ல நிகழ்வாக கொண்டு மகிழ்வார்கள். எங்களின் நன்மைக்கருதி நீங்கள் வந்திருப்பதும் இதைப் போன்றதே! 
நாங்கள் பலகாலம் செய்து வந்த வேள்விகள் இன்றுதான் கைகூடியது. இந்த மண்ணுலகிலும், விண்ணிலும், நாகலோகத்திலும் என்போன்ற பாக்கியவான் இனி வேறு யார் இருக்க முடியும். உம்மைக் கண்டது, தீபத்தைக் கண்ட இருளைப் போலவும், பகலவனைக் கண்ட பனியே போலவும் எங்களுக்கு உள்ளது. நாங்கள் இருவகைப் பற்றுக்களைத் துறந்து நாடு விட்டு காடு புகுந்து கடும் தவம் புரிந்து இருக்கும்போது, பேரின்பப் பெருவெள்ளத்தில் திளைக்கும் உம்மைப் போன்ற ரிஷிகள் இங்கு எழுந்தருளி இருப்பதன் காரணத்தை சொன்னால் நல்லது. -- தருமன் பணிந்து வணங்குகிறான். 
'தருமனே! இம்மையிலும் மறுமையிலும் ஒத்த வாழ்வை விழைந்து நிற்கும் எம்மைப் போன்ற தபோதனர், இவர் என்னைச் சேர்ந்தவர், அவர் பிறரைச் சேர்ந்தவர் என்று பேதம் பார்ப்பதில்லை. எல்லா உயிர்களையும் ஒரே அன்னையின் மக்களாகப் பாவித்தல் எமது கடன். இருந்தாலும், குணத்தில் குன்றாகிய உன்னை கண்டதும் என் மனம் சமநிலை தவறி உன் குணங்களுகுக அடிமைப்பட்டு விட்டது. மனம் குணத்திற்கு அடிமைப்பட்டதுதானே! வீட்டுலகு எய்தி நின்றவரும் உன் போன்ற குணசாலிகளை நேசிப்பர்." 
"சம புத்தி படைத்த தருமனே! ஆடியான்னுக்கு (கண்ணாடி அணிந்தவனான திருதராஷ்டிரனுக்கு) அவனின் புதல்வர்களான 100 பேருக்கு ஒப்ப, நீங்கள் ஐவரும் அன்பிற்குறிய அருந்தவப் புதல்வர்கள்தானே? அடக்கம், பொறை, கொடை, தயை முதலிய நல்ல குணங்களில் அவர்களிலும் நீங்கள் மேம்பட்டவர்கள்தானே? அங்ஙனம் இருந்தும் தன் வஞ்சகப் புதல்வன் கொண்ட அரச மோகம் காரணமாக அப்பாவியான உங்களை காட்டிற்கு துரத்திவிட்டான். என்னே அவன் பேதமை! கொடிய அரவக் கொடியோன், கெடு மதி படைத்த கர்ணன், சகுனி முதலியவர்கள் அடிக்கடி சந்தித்து சதி ஆலோசனை செய்து வருகின்றனர். திரு (செல்வம்) அவனை விரைவில் விட்டு அகலும். அன்று வேத்தவையில் அறநெறி பயின்று அறியாத துச்சாதனன், பாஞ்சாலியின் துகில் உரிந்த கொடும் பாதகச் செயலை கண்டும், இறையும் பொறுமையை இழக்காதிருந்தீர். தான் கொண்ட மனையாளை மாற்றான் மானபங்கஞ் செய்யக் கண்டு யார் மனம் பொறுத்திருப்பார்என்னே நும் அறிவுடமை! இஃதொன்றே அவன் பேதமையையும், உன் அறிவுடமையையும் கையுறு (கையில் உள்ள) நெல்லிக்கனி எனக் காட்டும். வஞ்சகச் சூழ்ச்சியால் உமக்கு எண்ணிலடங்காத தீங்கிழைத்த துரியோதனன் உண்மையில் உங்கள் பெருமையை உலகறியச் செய்து விட்டான். "நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் வேறொன்று நினைக்குமன்றோ?" அவனது வஞ்சகச் சூழ்ச்சியின்றேல் பாண்டவர் தம் தொல்புகல் அமுதினை இவ்வுலகம் பருகுவது எங்ஙனம்?" 
"தருமே வேந்தே! அரசு வன்மையாற்றான் (வண்மையால் தான்) பெற முடியும். அரவக் கொடியோன் மறம் மிகுந்த கடுங்கண் மறவர் படை திரட்டிப் போருக்கு ஆயத்தமாயிருக்கிறான். படைவலி மிகுந்த இடத்தில், வெற்றிக் கொற்றவை (வீரலட்சுமி)குடிகொள்வது வழக்கம். ஆதலால், நீங்களும் அத்துறையில் ஒல்லும் வகை உஞற்றுதல் நன்று. மூவேழு தலை முறையாகத் கொடுங்கோன் மன்னவர் குலத்தைக் கருவறுத்தவனும், கார்த்தவீரியன் ஓராயிரந்தோள் துணித்தவனும், யமதங்கி முனிவரின் அருந்தவப் புதல்வனுமாகிய பரசுராமனை, அம்பாலியர் சுயம்வரத்தில் வென்று துரத்திய வீடுமன், துரியோதனன் தானைத் தலைவனாக அமர்ந்துள்ளான். கூற்றுவனுக்கே ஓர் கூற்றுவனாம் அன்னவன் தனுவின் நாணொலியை (நாண் ஒலியை) கேட்ட அளவில் விற்படை கொண்டவர் கைகளிலிலிருந்து வில்லும், வாளியும் (அம்பும்) தாமே நழுவி விழுமன்றோ? அந்ம வீடுமனை எதிர்த்து விற்போர் புரிய உங்களில் யார் உள்ளனர்? முகில்விடு தாரையென்னச் சமர பூமியிற் கணை பெய்யும், வில் விஞ்சையில் வல்ல துரோணனும் ஆண்டு உளன். போர் முனையில் ஊழித்தீபோல உருத்தெழும் அவனை எதிர்த்து அடக்கும் வீரர் ஈண்டு யார் உளர்? மழுவுடையானிடம் தனுர் வித்தை பயின்ற அடலாண்மையுடைய அங்கர் காமானும் ஆங்கு உளன். மறலியும் அவனை மறம் கண்டு மனமஞ்சி மறுகுவன்.  அமர்களத்தில் அவனது வெஞ்சிலைகண்ட தெவ்வர் ஆவி அகத்ததோ, புறத்ததோ என அஞ்சி நடுங்குவர். அவனை எதிர்த்து போராற்றுவது எங்ஙனம்இத் தானைத் தலைவர்களை நீவிர் வென்று வாகை சூடுவதற்கான உபாயங்களை நுமக்கு எடுத்துரைக்கவே யாம் இவண் போந்த்தாகும் (வந்ததாகும்.)




Saturday, October 3, 2015

சூரியன்

சூரியன்
இந்த சூரியன், கசியபனுக்கும், அவன் மனைவி அதிதி-க்கும் பிறந்த மகன்;
இந்த சூரியனின் மனைவி சஞ்ஞாதேவி; (இந்த சஞ்ஞாதேவி என்பவள் துவஷ்டாவின் மகள்);
சூரியனுக்கும் அவன் மனைவி சஞ்ஞாதேவிக்கும் பிறந்தவர்கள் வைவசுவதமனு, யமுனு என இரு மகன்கள்; யமுனை என்று ஒரு மகள்; (மொத்தம் 3 குழந்தைகள்);
காலையில் எழும் உதயகால சூரியன் பிரமாவின் வடிவமாம்;
மத்தியானம் இருக்கும் சூரியன் சிவனின் வடிவமாம்;
மறையும் காலமான அஸ்தமன கால சூரியன் விஷ்ணுவின் வடிவமாம்;
இந்த சூரியன், 7 குதிரைகள் பூட்டப்பட்ட ஆழித் தேரில் பவனி வருவானாம்.
ஒவ்வொரு தினத்தையும் (நாளையும்) இவன் ஏற்படுத்துவதால் இவனுக்கு "தினகரன்" என்று பெயராம்;
இவன், பிரபயைச் செய்வதால் "பிரபாகரன்" என்று பெயராம்.
இந்த அண்டம் இந்த சூரியனை ஆதாரமாகக் கொண்டதாம்;
இதுபோல, இந்த சூரியன், துருவனை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறதாம்.
இந்த சூரியன், துருவனைச் சுற்றி வலம் வருகிறதாம்;
இந்த சூரியனின் ரதத்தில் ஒரு அச்சும், அந்த அச்சில் ஒரு உருளையும், அந்த உருளையில் கோக்கப்பட்ட பூட்டுக் கோல் என்னும் கொடிச்சிகளும், அதன் மீது பாரும், அதன் மீது தட்டும் இதன் உறுப்புகளாக உள்ளனவாம்.
இந்த கொடிஞ்சிகளில் 7 குதிரைகள் பூட்டி இருக்கிறதாம்;
அந்த 7 குதிரைகள்:-
1. காயத்திரி
2. பிருகதி
3.உஷ்ணி
4. ஜந்தி
5. திருஷ்டுப்பு
6.அநுஷ்டுப்பு
7. பந்தி
(7 வண்ணங்கள்)
இந்த சூரியனின் உருளையின் ஒரு பக்கத்தின் அச்சு நீண்டு இருக்குமாம்; மற்றது குறுகி இருக்குமாம்;
இந்த உருளையின் உருட்டின்படி, காலை, நண்பகல், மாலை என்னும் பிரிவுகள் ஏற்படுகிறதாம்.
இந்த உருகளையின் ஆரங்கள் மொத்தம் ஐந்து:-
1. சம்வற்சரம்
2. பரிவற்சரம்
3. இடாவற்சரம்
4. அநுவற்சரம்
5. இத்துவற்சரம்
இந்த சூரியனின் குறுகிய அச்சுப் பக்கம் துருவ பக்கத்தை நோக்கி இருக்குமாம்; இந்த அச்சு, துருவ நட்சத்திரதிலிருந்து வரும் வாயு வடிவில் உள்ள கயிறுகளிலே தொடர்பில் இருக்குமாம்;
இந்த சூரிய உருளையானது, மானசோத்தர பர்வதத்தின் (மலை) மீது சஞ்சரித்து வலம் வருமாம்;
இந்த மலையின் கிழக்கில் இந்திரனுக்கு உரிய வசுவோகசார நகரம் உள்ளதாம்;
தெற்கில் யமனுக்கு உரிய சம்யமனி நகரம் உள்ளதாம்;
மேற்கில் வருணனுக்கு உரிய சகா நகரம் உள்ளதாம்;
வடக்கில் சோமனுக்கு உரிய விபாவரீ நகரம் உள்ளதாம்;
சூரியன், உதயம் ஆவது போலவும், அஸ்தமனம் ஆவது போலவும் இருந்தாலும் அது அப்படி உதித்து அஸ்தமனம் ஆவது இல்லையாம்;
சூரியன் செல்லாத இடம் உள்ளதாம்; அதற்கு மேரு பக்கம் என்று பெயராம். இங்கு சூரியன் உதிப்பதில்லையாம்;
சூரியன் வலம் வரும் கிரணங்கள் மொத்தம் 183.
இவைகள், தட்சிணாயனம் முதல் உத்தராயணம் வரை உள்ள எல்லைகளைக் கொண்டதாம்; இந்த கிரகங்கள் உத்தராயண காலத்தில் ஏறுவதும், தட்சிணாயன காலத்தில் இறங்குவதும் உண்டாம்;
இதில் உள்ள 183 கிராந்தி விருத்தத்தில், ஒவ்வொரு விருத்தத்திற்கும் இரண்டாக மொத்தம் 366 கதிகளை கொண்டு ஒரு வருடம் உண்டாகிறதாம்.
ஒவ்வொரு மாதமும் சூரியன் தன் இயல்பை வேறுபடுத்திக் கொள்கிறதாம். அதனால் 12 மாதங்கள் உருவாகிறதாம். அதனால், 12 சூரியர்கள் என்றும் பெயர் உண்டாம்;
சூரிய ரதத்தில், 7 கணங்களான, சூரிய ரிஷி கந்தருவ அப்சர யட்ச சர்ப்ப ராட்சச கணங்கள் 7ம் ஏறி உட்கார்ந்திருக்குமாம்.
சித்திரை மாதத்தில் தாதா என்னும் சூரியனும், கிருஸ்தலை என்னும் அப்சரப் பெண்ணும், புலஸ்திய ரிஷியும், வாசுகி சர்ப்பமும், ரதபிருத்து என்னும் யட்சனும், ஹேதிரா என்னும் யட்சனும், தும்புரு என்னும் கந்தருவனும், அந்த ரதத்தில் இருப்பார்களாம்;
வைகாசியில், சூரியன் = அரியாமா; ரிஷி = புலகர்; அப்சரசு = புஞ்சிகஸ்தலை; யட்சன் = ரதௌஜா; சர்ப்பம் = கச்சவீரன்; கந்தருவன் = தாரதன்; ராட்சசன் = பிரஹேதி;
இப்படி 12 மாதங்களுக்கும் மாறுபடுவர்;
சூரிய ரதத்தில் இருக்கும் இவர்கள்தான், பூமியில் ஏற்படும் மழை, பனி, வெயில், சுகம், விருத்தி, பஞ்சம் முதலியவற்றுக்கு காரணம் ஆவார்களாம்;
ரிஷிகள், சூரியனை வணங்கிக் கொண்டிருப்பார்களாம்;
ரம்பையர் ஆடிக் கொண்டிருப்பார்களாம்;
ராட்சசர் பின்தொடர்ந்து நிற்பார்களாம்;
சர்ப்பங்கள் தாங்கிக் கொண்டிருக்குமாம்;
யட்சர் கடிவாளம் பிடித்துக் கொண்டிருப்பார்களாம்;
கந்தருவர் பாடிக் கொண்டிருப்பார்களாம்;
**



சூரியசாவர்ணி

சூரியசாவர்ணி
இவர் 8-வது மனு ஆவார்.
இவர் சூரியனுக்கு சாயாதேவியிடம் பிறந்த மகன்;
இந்த மனு தான் இனி இந்த உலகுக்கு வரப்போகும் மனு என்கிறார்கள்.
இதற்கு முன் இருந்த மனுவுக்கு, இந்த மனு, சமமானவன் என்பதால் இவனுக்கு சாவர்ணி என்று பெயர் வந்ததாம்.
இந்த மனு காலத்தில் தோன்றும் மற்றவர்கள்:-
சுதபர், அமிதாபர், முக்கியர் என மூன்று வகை தேவகணங்கள் தோன்றுவார்களாம்;
தீப்திமான், காலவன், ராமன், கிருபன், அசுவத்தாமன், வியாசன், சிருங்கன் என சப்த ரிஷிகள் தோன்றுவார்களாம்;
பாதலத்தில், தவஞ்செய்யும் பலிச் சக்கரவர்த்தி தேவேந்திர பதவியை அடைவாராம்;
விரஜன், சர்வரீவான் , நிர்மோகன், முதலியோர் இந்த பூவுலகில் மானிடருக்கு அதிபதிகள் ஆவார்களாம்.