தோன்றி நின்று ஒடுங்கும் உலகு:
இந்த பிரபஞ்சம் என்னும் உலகங்கள் தோன்றி, நின்று இருந்து, பின்னர் அழியும் நிலை உடையதாம்.
"நீல மேனி வாலிழை பாகத்துஒருவன் இருதாள் நிழற்கீழ்மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே." -- ஐங்குறுநூறு
மூன்று வகை உலகும் தோன்றி, நின்று, ஒடுங்கும் உலகு.அவன் தாள் நிழற்கீழ் என்னும் அவன் காலடியில் இந்த மாய
உலகுகள் தோன்றி, நின்று, மறைகின்றன.
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்,நிலை பெறுதலும், நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டு". -- கம்பர்.
"மாயையென் றெருத்தி தன்பால்மனமென்னும் மைந்தன் தோன்றித்
தூயநல் லறிவன் தன்னைத்தோற்றமின் றாக்கி வைத்தான்தாயொடு தந்தை மக்கள்தாரமென் றிவர்பால் வைத்தநேயமும் அவன்ற னாலேநிகழ்ந்த்தோர் நினைவு கண்டாய்." --- வில்லிபாரதம்.
உறவு, பாசம் கூட மாயைதானோ!
அர்ச்சுனன் போர்முனையில் நிற்கிறான். சோர்ந்து
விட்டான். உறவுகளைக் கொன்று கிடைக்கும் பலன் என்ன? பாட்டனையும், குருவையும் கொல்வதா?
"அர்ச்சுனா! மாயை என்ற பெண் உன் மனதைக்
கட்டி போட்டுவிட்டாள். நீயோ, தாய், தந்தை, தாரம், என்று உறவுகளை நினைத்து அழுகிறாய்.
கிருஷ்ணனாகிய நானோ, உன்னை, உனது
பிறவிகள் தோறும் நன்னெறிப்படுத்தி வருகிறேன். பாசத்தை விட்டுவிடு அர்ச்சுனா!"
அர்ச்சுன்னின் மகன் அபிமன்யூ. இவன் சுபத்திரையின்
மகன். சுபத்திரை கிருஷ்ணனின் தங்கை. பாண்டவர்களுக்கு அபிமன்யூ என்றால் உயிர்.
போரில், அபிமன்யூ அபாயச் சங்கை ஊத, கிருஷ்ணன்
தன்னிடம் சும்மா இருந்த சங்கை எடுத்து ஊத, அபிமன்யூவை
அநியாயமாக மாளச் செய்தான்.
அர்ச்சுனனுக்கு தீராத சோகம். மகனைப் பறிகொடுத்த
சோகம். அக்கினியில் புக தயாராகிறான். கிருஷ்ணன் அவனைத் தடுக்கிறார். கிருஷ்ணன், அர்ச்சுனனை நேரடியாக
கைலாசத்துக்கு அழைத்துகச் செல்கிறார். அங்கு அபிமன்யூவைப் பார்க்கிறான்
அர்ச்சுனன். மகன் என்று பாசத்தில் அவனைக் கட்டித் தழுவ விரைகிறான் அர்ச்சுனன்.
ஆனால், அபிமன்யூ, இவனை யாரோ என்று
கருதி, அருவருத்து ஒதுக்குகிறான். பாசவலை இல்லை என்பதை
புரிந்து கொள்கிறான்.
இந்த உலகுக்கு திரும்புகின்றனர். இங்கு தன்
மகனைக் கொன்றவர்களை கொல்கிறான் அர்ச்சுனன். புத்திர சோகத்தை அது ஒரளவு மறக்கச்
செய்கிறது.
பாரத யுத்தம் முடிகிறது. கிருஷ்ணனும் மறைகிறான்.
அர்ச்சுனனால் அதற்கு மேல் இயங்க முடியவில்லை.
அர்ச்சுன்னால் தன்னிடம் இருந்த காண்டீபத்தை அசைக்கக் கூட முடியவில்லை. செயல்
இழக்கிறான். பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிறான்.
கிருஷ்ணனும் அர்ச்சுனனும் பிறவிகள் தோறும்
ஒன்றாகவே இருந்திருக்கின்றனர். ராமனாகவும் லட்சுமணனாகவும் இருவரும் ஒரு பிறப்பில்.
மற்றொரு பிறப்பில் நரனும், நாரணணுமாக. இதில் கிருஷ்ணனும், அர்ச்சுனனுமாக.
இனி அடுத்த பிறப்பில், அர்ச்சுனன், கண்ணப்பராக, அவன் காளத்தியப்பனாக.
பிறவிகள் தோறும் பாசத்தில் (மாயையில்) சிக்கித்
தவிக்கும் இந்த மனதை அதிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டுமாம்.
No comments:
Post a Comment