திருவிளையாடல்--16
மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய
விளையாட்டுக்களே திருவிளையாடல்கள் எனப்படும்.
(சிவபெருமான் ஒரு அந்தணச் சிறுவனாக வேடம் கொண்டு, முனிவர்களுக்கு வேதத்தின்
உட்பொருளை உணர்த்திய கதை).
சிவபெருமான், மதுரைக்கு மாப்பிள்ளையாக வந்தவர்; சோமசுந்தர பாண்டியன் என்ற பெயருடன் மதுரைக்குள் நுழைந்து, அங்கு மதுரை பாண்டிய மன்னன் மலயத்துவச பாண்டியனின் மகளான, (உமாதேவியின் உருவில் இருக்கும்) தடாதகைப்பிராட்டியை திருமணம் செய்து
கொண்டு, மதுரையிலேயே மாமியார் வீட்டில் தங்கி விடுகிறார்;
மாமனார் ஏற்கனவே இறந்து விட்டார்; மாமியாரும்,
மனைவி தடாதகைப்பிராட்டியும்தான். இவருக்கு ஒரு மகன் பிறக்கிறான்;
அவன்தான் உக்கிரவர்ம பாண்டியன்;
அவனுக்கும் திருமணம் நடக்கிறது; உக்கிரவர்ம பாண்டியனின்
மனைவி காந்திமதி; இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான்; அந்த காலக்கட்டத்தில்தான், சிவபெருமான் என்னும்
சோமசுந்தரபாண்டியன் வேறு எங்கு சென்று இருக்கிறார் போலும்! ஒருவேளை, தான் வாழ்ந்த இடமான, கைலாசத்துக்கு போய் இருப்பாரோ
என்று சந்தேகமாக உள்ளது;
இப்படி இருக்கும்போது, முனிவர்கள் அனைவரும்
அவரைப் பார்க்க வருகிறார்கள்; அதில் கண்ணுவ முனிவர் பெரிய
முனிவர்; இந்த முனிவர்கள் யாருக்கும் வேதத்தின் உட்பொருள்
தெரியவில்லையாம்;
எனவே சிவபெருமான், ஒரு அந்தணச் சிறுவனைப் போல ஆள்
மாறி, அங்கு வந்து, முனிவர்களைப்
பார்த்து அவர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கிச் சொல்கிறார்; அதன்பின்னரே முனிவர்களுக்கு வேதத்தின் பொருளே விளங்குகிறதாம்.
இப்படியாக அந்தணச் சிறுவனாகி, வேதத்தை உபதேசித்த
நிகழ்வே பதினாறாம் திருவிளையாடல்.
**
No comments:
Post a Comment