அண்ட பிண்டங்கள் ஒரே தன்மை உடையன என்பது தத்துவ
சாஸ்திரிகளின் கொள்கை. சோதிட சாஸ்திரத்தில் சிறப்பாக சூரிய சித்தாந்தத்தில்
அண்டத்திலுள்ள நவகிரங்களும் பிண்டத்திலுள்ள உறுப்புகளும் ஒப்பிடப்பட்டிருக்கின்றன.
அதாவது அண்டத்தில் உள்ள வான சோதிகளின் குணங்களை, பிண்டத்தில் உள்ள பல அங்கங்கள்
வைத்திருக்கின்றன.
சூரியன் ஆத்மா என்றும், சந்திரன் தேகம், மனம் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றன.
ஜென்ம லக்கனத்திற்கு ஐந்தாவது இராசி, புத்திரன், மனம் முதலியவைகளைக் காட்டும். ஐந்தில் இருப்பவன் என்ன கிரகமோ அந்தக்
கிரகத்தைக் கொண்டு, ஜாதகரின் மனச் சுபாவத்தை சோதிடர் சொல்ல
முடியுமாம். மனதைக் குறிக்கும் சந்திரனுடன் பூமிகாரகன் செவ்வாய் கூடி இருந்தால்
பிருதிவியின் குணமாகிய லௌகிக விஷயத்தில் மனச் செல்லும்.
சந்திரனுக்கும் மனதுக்கும் சம்மந்தம் உண்டு.
ஏனெனில், Lunatic = in Latin, Luna = Moon. பைத்தியம் என்னும் விசரன் என்ற வார்த்தைக்கு உபயோகிக்கும் பதம் சந்திரன்
என்று பொருள்படும் அந்தப் பதத்தை தாதுவாய் வைத்திருக்கிறது. அனுபவத்தில், பைத்தியர்கள் Fullmoon என்னும் பௌர்ணமி நாளில் விசர்
அதிகப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு
இல்லாவிடில் அவ்வாறு வருவதற்கு அவசியமில்லை. மேலும் அமாவாசை, பௌர்ணமி காலங்களில் கடல் வற்றிப் பெருக்கெடுக்கும்.
சந்திரனை ஒட்டியே ஆண்களுக்கும் பெண்களுக்கும்
திருமணப் பொருத்தம் பார்ப்பது.
(நன்றி: சித்தகுமாரன் தத்துவம்)
No comments:
Post a Comment