திருவிளையாடல்-5
மதுரை நகரில் சிவபெருமான் செய்த விளையாடல்களே
திருவிளையாடல் எனப்படும்.
(தாடகைப்பிராட்டியைத் திருமணம் செய்தது ஐந்தாம்
திருவிளையாடல்)
குலசேகர பாண்டிய மன்னனின் மகன் மலயத்துவச
பாண்டியன். மலையத்துவச பாண்டியனின் மனைவி பெயர் காஞ்சனமாலை; இவர்களுக்கு வெகுகாலம்
குழந்தைப்பாக்கியம் இல்லாமல் இருந்து, பின்னர், அதற்காக யாகம் செய்தபோது, அதில், உமாதேவியே, "தாடகைப்பிராட்டியாக" மூன்று
வயது குழந்தையாக எழுந்தருளினாராம். இது நான்காவது திருவிளையாடல்.
இனி ஐந்தாவது திருவிளையாடல்:
மலையத்துவச பாண்டியன், தன் மகள்
தாடகைபிராட்டிக்கு ராணியாக முடிசூட்டுகிறார். பின்னர் சில காலம் கழித்து, மலையத்துவச பாண்டியன் சிவபதவியை அடைகிறார். பின்னர், தாடகைப் பிராட்டி, பாண்டிய நாட்டின் ராணியாக
இருக்கும்போது, திக்விஜயம் மேற்கொள்கிறார். எல்லாத்
திசைகளிலும் சென்று அங்குள்ள அரசர்களை வென்று வெற்றி வாகை சூடுகிறார். பின்னர்,
வடக்குத் திசைக்கு போருக்கு போகும்போது, அங்குள்ள அரசர்களையெல்லாம் வென்று,
கடைசியாக கைலாசத்துக்கு போகிறார். அங்கு போர் செய்கிறார். அங்கு கைலாசத்தில்
சிவபெருமான் இருக்கிறார். இந்த ராணியான தாடகைப்பிராட்டி என்பவர் உண்மையில் சிவனின்
மனைவியான உமாதேவியின் பிறப்பே!
இந்த தாடகைப்பிராட்டி சிறுவயதில் குழந்தைப்
பருவத்தில் வளர்ந்து, பருவவயதை அடையும் காலத்தில், அவருக்கு மூன்று முலைகள்
உருவாகியதாம். எதற்காக அப்படி ஏற்பட்டது என வினவியபோது, இந்தப்
பெண், எப்போது தன் கணவனை முதன்முதலில் பார்க்கிறாரோ அப்போது இதில்
ஒன்று மறைந்துவிடும். அப்படி இவளைப் பார்ப்பவரே இவளின் கணவர் என்று அடையாளம்
கண்டுகொள்க என்று தெரியவந்ததாம்.
இங்கு, கைலாசத்தில், தாடகைப்பிராட்டி
என்னும் ராணி, சிவபெருமானைத் தரிசிக்கிறார். அப்போது அவளின்
மும்முலைகளில் ஒன்று மறைந்துவிடுகிறது. இயல்பான் பெண்களுக்குறிய இரண்டு மட்டும்
இருக்கிறதாம். உடனே, இந்தச் சிவபெருமான்தான் என் கணவர் என்று
கண்டுகொண்டவுடன், நாணிவிட்டாராம். துணிச்சலான ராணி, தன் கணவரைக் கண்டு கொண்டவுடன் நாணிவிட்டாராம். சிவனுக்கும் இவள்தான் தன்
மனைவி என்று கண்டுகொண்டாராம்.
உடனே சிவன், "தாடகைப்பிராட்டியே! உன்னை நான் மதுரையில் வந்து
திருமணம் செய்து கொள்வேன்; சந்தோஷமாக செல்க!" என்று
கூறி வழியனுப்பி வைத்திருக்கிறார்.
கைலாசத்திலிருந்து மதுரைக்கு வருகிறார்
தாடகைப்பிராட்டி. அங்கு வந்த சிவன், "சோமசுந்தர பாண்டியனார்" என்ற பெயருடன்
சென்று தாடகைப்பிராட்டியை உலகறிய திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்னர்
மதுரையை மனைவியின் பொருட்டு ஆட்சி செய்கிறார்.
தாடகைப்பிராட்டி மதுரையின் ராணி; அவரின் கணவர் சோமசுந்தர
பாண்டியனும் மனைவிக்காக ஆட்சி செய்கிறார்போலும்!
இவர்கள் இருவரும் உண்மையில் உமாதேவியும், சிவபெருமானும் என்கிறது
திருவிளையாடல்.
**
No comments:
Post a Comment