திருவிளையாடல்-2
மதுரையில்
சிவபெருமான் செய்த விளையாட்டுகளை திருவிளையாடல் என்பர்.
"தலைக்கு வந்தது, தலை முடியோடு போயிற்று."
சிவனின் தலையில்
இருந்து ஒரு மாலை கீழே விழுந்தது. அதை அங்கிருந்த துர்வாச முனிவர் எடுத்துக்
கொண்டு போய், இந்திரனுக்குக் கொடுக்கிறார்.
ஆனால், இந்திரன் அதை வெகு அலட்சியமாக ஒரு கையால் வாங்கிக்
கொள்கிறான். அதை அவன் வைத்துக் கொள்ளாமல், அவனின் வாகனமான
யானையின் தலை மீது வீசுகிறான். அவன் வைத்திருக்கும் யானை வாகனத்துக்குப் பெயர்
ஐராவதம். அந்த யானை, அவனைப் போலவே அகங்காரம் கொண்டு, அந்த மாலையை எடுத்து தன் காலில் போட்டு மிதித்து தன் வெறுப்பை
வெளிப்படுத்துகிறது.
இதைப் பார்த்த
துர்வாச முனிவருக்கு கோபம் உச்சிக்க்கு போகிறது. ஏற்கனவே இயல்பிலேயே அவர் கோபக்கார
முனிவர். அவரிடம் சாபம் வாங்கியவர்கள் ஏராளம். அப்படி இருக்கும்போது, இந்த இந்திரனும், அவன் யானையான
ஐராவதமும் செய்த செயல்கள் உண்மையில் சிவனை மதிக்காமல் அலட்சியப் படுத்தி விட்டதாக
கோபம் வந்து சாபம் இடுகிறார்.
"உன் தலை சுக்கு
நூறாக சிதரட்டும்; உன் யானையான ஐராவதம்,
இனி காட்டு யானையாக சுற்றித் திரியட்டும்" என்று சாபம்
கொடுக்கிறார்.
அப்போதுதான், இந்திரனுக்கு தெரியவருகிறது,
இந்த துர்வாசர் படு கோபக்காரர் என்றும், பொல்லாத சாபங்களை
கொடுப்பார் என்பது விளங்குகிறது. உடனே, முனிவரின் காலில்
விழுந்து வணங்கி, மன்னித்துக் கொள்ளும்படி கேட்கிறான்.
முனிவரும் சினம்
தணிந்து, "நான் கொடுத்த சாபத்தை
திரும்ப பெற முடியாது; ஆனாலும் அந்த சாபத்தின் வேகத்தை
கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு, உன்
தலைக்கு வந்தது, உன் முடி மட்டும் போகக் கடவது; உன் யானை, காலமெல்லாம் காட்டு யானையாகத் திரியாமல்
25 வருடங்களுக்கு மட்டும் காட்டு யானையாக இருந்து பின்னர் உன்னிடம்
சேரட்டும்" என்று தீர்ப்பை மாற்றி எழுதிவிட்டார்.
ஐராவதம் யானை 25
வருடங்களைக் காட்டில் திரிந்து கழித்துவிட்டு, கடம்பவனத்துக்கு
(மதுரைக்கு) வருகிறது. அங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடுகிறது. உடனே அது
ஐராவதம் யானையாக (இந்திரனின் வாகனமாக) மாறிவிட்டது. ஆனாலும் அது, சிவனிடம் சென்று சிவனின் காலடியிலேயே நிற்கிறது. உடனே சிவன், அந்த யானைப் பார்த்து, இனி நீ முன்போலவே இந்திரனின்
வாகனமாகப் போய் இரு என்று கட்டளை இடுகிறார். அதன்படி ஐராவதம் யானை இந்திரனை
அடைந்தது.
**
No comments:
Post a Comment