திருவிளையாடல்--8
சிவபெருமான் மதுரையில் நடத்திய விளையாட்டுக்களே
திருவிளையாடல் எனப்படும்;
(குண்டோதரனின் அடங்காப் பசிக்காக அன்னக்குழியை
ஏற்படுத்தி, அவன்
தாகத்தை தீர்க்க, வைகை ஆற்றை வரவழைத்த திருவிளையாடல்)
மதுரையில், சோமசுந்தரபாண்டியனாக வந்திருக்கும் சிவபெருமானின்
திருமணம் நடந்து முடிந்து விட்டது; மணமகள், ராணியான தாடகைப்பிராட்டியே திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்;
ஆனால், சிவனின் கணங்களில் ஒருவனான குண்டோதரனே
மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு, இன்னும் எனக்கு உணவு
வேண்டும் என்று அடம்பிடிக்கிறான்;
இந்த திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த
மணமகள் தாடகைப்பிராட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; கணவரைப் பார்த்து நாணி
நிற்கிறார்;
கணவர், சோமசுந்தர பாண்டியன், உண்மையில்
சிவபெருமான் ஆவார்; அவர், அங்கு ஒரு
பெரிய அன்னக்குழியை ஏற்படுத்துகிறார்; அதில் முழுக்க முழுக்க
சோறு இருக்கிறது; அதிலிருந்து எவ்வளவு சோற்றை எடுத்தாலும்
குறையாது; எனவே அதிலிருந்து சோற்றை எடுத்து, குண்டோதரன் பசி தீரும்வரை உணவளிக்கிறார்; அவனுக்கு
பசி தீர்கிறது; அவனின் தாகத்துக்கு எவ்வளவு நீர்
கொடுத்தாலும் போதாது; எனவே, சிவன்,
வைகை நதியையே மதுரைக்கு அருகில் வரவழைக்கிறார்; அதிலுள்ள
நீரை குண்டோதரன் குடிக்கும்படி செய்து அவனின் தாகம் தீர்க்கிறார்;
இப்படியாக, தன் மனைவியின் சிக்கலைத் தீர்க்கிறார் சோமசுந்தர
பாண்டியனாக வந்திருக்கும் சிவபெருமான்.
இவ்வாறு தன் மனைவியின் நெருக்கடியைத்
தீர்த்துவைத்த விளையாட்டே எட்டாம் திருவிளையாடல்.
**
No comments:
Post a Comment