Saturday, October 3, 2015

சூரியன்

சூரியன்
இந்த சூரியன், கசியபனுக்கும், அவன் மனைவி அதிதி-க்கும் பிறந்த மகன்;
இந்த சூரியனின் மனைவி சஞ்ஞாதேவி; (இந்த சஞ்ஞாதேவி என்பவள் துவஷ்டாவின் மகள்);
சூரியனுக்கும் அவன் மனைவி சஞ்ஞாதேவிக்கும் பிறந்தவர்கள் வைவசுவதமனு, யமுனு என இரு மகன்கள்; யமுனை என்று ஒரு மகள்; (மொத்தம் 3 குழந்தைகள்);
காலையில் எழும் உதயகால சூரியன் பிரமாவின் வடிவமாம்;
மத்தியானம் இருக்கும் சூரியன் சிவனின் வடிவமாம்;
மறையும் காலமான அஸ்தமன கால சூரியன் விஷ்ணுவின் வடிவமாம்;
இந்த சூரியன், 7 குதிரைகள் பூட்டப்பட்ட ஆழித் தேரில் பவனி வருவானாம்.
ஒவ்வொரு தினத்தையும் (நாளையும்) இவன் ஏற்படுத்துவதால் இவனுக்கு "தினகரன்" என்று பெயராம்;
இவன், பிரபயைச் செய்வதால் "பிரபாகரன்" என்று பெயராம்.
இந்த அண்டம் இந்த சூரியனை ஆதாரமாகக் கொண்டதாம்;
இதுபோல, இந்த சூரியன், துருவனை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறதாம்.
இந்த சூரியன், துருவனைச் சுற்றி வலம் வருகிறதாம்;
இந்த சூரியனின் ரதத்தில் ஒரு அச்சும், அந்த அச்சில் ஒரு உருளையும், அந்த உருளையில் கோக்கப்பட்ட பூட்டுக் கோல் என்னும் கொடிச்சிகளும், அதன் மீது பாரும், அதன் மீது தட்டும் இதன் உறுப்புகளாக உள்ளனவாம்.
இந்த கொடிஞ்சிகளில் 7 குதிரைகள் பூட்டி இருக்கிறதாம்;
அந்த 7 குதிரைகள்:-
1. காயத்திரி
2. பிருகதி
3.உஷ்ணி
4. ஜந்தி
5. திருஷ்டுப்பு
6.அநுஷ்டுப்பு
7. பந்தி
(7 வண்ணங்கள்)
இந்த சூரியனின் உருளையின் ஒரு பக்கத்தின் அச்சு நீண்டு இருக்குமாம்; மற்றது குறுகி இருக்குமாம்;
இந்த உருளையின் உருட்டின்படி, காலை, நண்பகல், மாலை என்னும் பிரிவுகள் ஏற்படுகிறதாம்.
இந்த உருகளையின் ஆரங்கள் மொத்தம் ஐந்து:-
1. சம்வற்சரம்
2. பரிவற்சரம்
3. இடாவற்சரம்
4. அநுவற்சரம்
5. இத்துவற்சரம்
இந்த சூரியனின் குறுகிய அச்சுப் பக்கம் துருவ பக்கத்தை நோக்கி இருக்குமாம்; இந்த அச்சு, துருவ நட்சத்திரதிலிருந்து வரும் வாயு வடிவில் உள்ள கயிறுகளிலே தொடர்பில் இருக்குமாம்;
இந்த சூரிய உருளையானது, மானசோத்தர பர்வதத்தின் (மலை) மீது சஞ்சரித்து வலம் வருமாம்;
இந்த மலையின் கிழக்கில் இந்திரனுக்கு உரிய வசுவோகசார நகரம் உள்ளதாம்;
தெற்கில் யமனுக்கு உரிய சம்யமனி நகரம் உள்ளதாம்;
மேற்கில் வருணனுக்கு உரிய சகா நகரம் உள்ளதாம்;
வடக்கில் சோமனுக்கு உரிய விபாவரீ நகரம் உள்ளதாம்;
சூரியன், உதயம் ஆவது போலவும், அஸ்தமனம் ஆவது போலவும் இருந்தாலும் அது அப்படி உதித்து அஸ்தமனம் ஆவது இல்லையாம்;
சூரியன் செல்லாத இடம் உள்ளதாம்; அதற்கு மேரு பக்கம் என்று பெயராம். இங்கு சூரியன் உதிப்பதில்லையாம்;
சூரியன் வலம் வரும் கிரணங்கள் மொத்தம் 183.
இவைகள், தட்சிணாயனம் முதல் உத்தராயணம் வரை உள்ள எல்லைகளைக் கொண்டதாம்; இந்த கிரகங்கள் உத்தராயண காலத்தில் ஏறுவதும், தட்சிணாயன காலத்தில் இறங்குவதும் உண்டாம்;
இதில் உள்ள 183 கிராந்தி விருத்தத்தில், ஒவ்வொரு விருத்தத்திற்கும் இரண்டாக மொத்தம் 366 கதிகளை கொண்டு ஒரு வருடம் உண்டாகிறதாம்.
ஒவ்வொரு மாதமும் சூரியன் தன் இயல்பை வேறுபடுத்திக் கொள்கிறதாம். அதனால் 12 மாதங்கள் உருவாகிறதாம். அதனால், 12 சூரியர்கள் என்றும் பெயர் உண்டாம்;
சூரிய ரதத்தில், 7 கணங்களான, சூரிய ரிஷி கந்தருவ அப்சர யட்ச சர்ப்ப ராட்சச கணங்கள் 7ம் ஏறி உட்கார்ந்திருக்குமாம்.
சித்திரை மாதத்தில் தாதா என்னும் சூரியனும், கிருஸ்தலை என்னும் அப்சரப் பெண்ணும், புலஸ்திய ரிஷியும், வாசுகி சர்ப்பமும், ரதபிருத்து என்னும் யட்சனும், ஹேதிரா என்னும் யட்சனும், தும்புரு என்னும் கந்தருவனும், அந்த ரதத்தில் இருப்பார்களாம்;
வைகாசியில், சூரியன் = அரியாமா; ரிஷி = புலகர்; அப்சரசு = புஞ்சிகஸ்தலை; யட்சன் = ரதௌஜா; சர்ப்பம் = கச்சவீரன்; கந்தருவன் = தாரதன்; ராட்சசன் = பிரஹேதி;
இப்படி 12 மாதங்களுக்கும் மாறுபடுவர்;
சூரிய ரதத்தில் இருக்கும் இவர்கள்தான், பூமியில் ஏற்படும் மழை, பனி, வெயில், சுகம், விருத்தி, பஞ்சம் முதலியவற்றுக்கு காரணம் ஆவார்களாம்;
ரிஷிகள், சூரியனை வணங்கிக் கொண்டிருப்பார்களாம்;
ரம்பையர் ஆடிக் கொண்டிருப்பார்களாம்;
ராட்சசர் பின்தொடர்ந்து நிற்பார்களாம்;
சர்ப்பங்கள் தாங்கிக் கொண்டிருக்குமாம்;
யட்சர் கடிவாளம் பிடித்துக் கொண்டிருப்பார்களாம்;
கந்தருவர் பாடிக் கொண்டிருப்பார்களாம்;
**



No comments:

Post a Comment