திருவிளையாடல்--9
மதுரையில் சிவபெருமான் நடத்திய விளையாட்டுக்களே
திருவிளையாடல் எனப்படும்.
(சிவனின் மாமியார் காஞ்சனமாலை புண்ணிய
நீராடுவதற்காக ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்த கதை)
சோமசுந்தர பாண்டியனுக்கும், மதுரை ராணி
தாடகைப்பிராட்டிக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது; இந்த
மணமகன்தான் சிவபெருமான்; கைலாசத்திலிருந்து, தாடகைப் பிராட்டியை திருமணம் செய்வதற்காகவே மதுரைக்கு வந்து, திருமணமும்
செய்து, மாமியார் வீட்டிலேயே மதுரையில் தங்கியும் விட்டார்;
மாமியார் வீட்டில் இருக்கும் மருமகன், ஏதாவது ஒரு வீரச்செயலை
அவ்வப்போது செய்து கொண்டிருந்தால்தான் மரியாதை;
இவரின் மாமியார் பெயர் காஞ்சனமாலை; இவரின் கணவர்தான்
மலயத்துவச பாண்டியன்; இவர்களுக்குத்தான் வெகுகாலம் குழந்தை
இல்லாமல் யாகம் செய்து இந்த தடாதகைப் பிராட்டி பிறந்தாள்; தடாதகைப்
பிராட்டி வளர்ந்து வந்தவுடன் அவளுக்கு ராணியாக முடிசூட்டிவிட்டு, மலயத்துவச பாண்டியன் இறந்து விட்டார்; அவரின் மனைவி
தான் இந்த காஞ்சனமாலை; விதவை; எனவே
அவர் எல்லா கடலுக்கும் சென்று புனித நீடாட வேண்டும் என்பது அப்போதைய வழக்கம்;
அவர் புனித நீராட புறப்படுவதற்கு ஏற்பாடுகளைச் செய்யும்படி, தன் மகளும் ராணியுமான தடாதகைப்பிராட்டிக்கு சொல்லிவிட்டாள்; ஆனால் ராணி, தன் கணவர் சோமசுந்தர பாண்டயனிடம்,
தன் தாயார் புனித நீராடப் போக இருப்பதாக சொல்கிறார்;
இதை அறிந்த சோமசுந்தர பாண்டியன், மாமியார் மெச்சும்படி ஒரு
வேலையை செய்து காண்பிக்க வேண்டும் என நினைத்து, அதற்கு இதுவே
தருணம் என்று கருதினார்; தன் மனைவியிடம், "உன் தாயார், எதற்காக ஏழு கடல் இருக்கும் இடத்திற்கு
சென்று நீராட வேண்டும்; நானே அந்த ஏழு கடல்களையும் மதுரைக்கே
வரவழைக்கிறேன்; அங்கு உன் தாயார் புனித நீடாடிக் கொள்ளட்டுமே?"
என்று கூறுகிறார்; இப்படிப்பட்ட கணவர்
கிடைத்தால் மனைவிக்கு மகிழ்ச்சிதானே! ஒப்புக் கொள்கிறார்;
சிவனாக இருக்கும் சோமசுந்தர பாண்டியன், தம் மாமியாருக்காக,
ஏழு கடல்களையும் மதுரைக்கே கொண்டுவந்து மாமியாரை புனித நீராட வைத்த
விளையாட்டே ஒன்பதாம் திருவிளையாடல்.
**
No comments:
Post a Comment