திருவிளையாடல்--6
மதுரையில் சிவபெருமான் செய்த விளையாட்டுக்களே
திருவிளையாடல்கள் எனப்படும்.
(சிவபெருமான், தன் திருமணத்தில் கலந்துகொள்ள மதுரைக்கு
வந்தவர்களுக்காக, மதுரையில் அவர் திருநடனம் ஆடிக்காட்டியதே ஆறாம் திருவிளையாடல்)
சிவபெருமான் கைலாசத்திலிருந்து மதுரைக்கு வந்து, அங்கு சோமசுந்தர பாண்டியனார் என்ற பெயருடன், மதுரை
ராணியான தடாதகைப் பிராட்டியைத் திருமணம் செய்து கொள்கிறார். மதுரையில் இவர்களின்
திருமணம் நடக்கிறது. மணமகன்: சோமசுந்தர பாண்டியன்; மணமகள்:
ராணி தாடகைப்பிராட்டி. ஆனால் இவர்கள் இருவரும் உண்மையில் சிவபெருமான்-உமாதேவி
ஆவார்கள்.
இந்தத் திருமணத்துக்கு பலர் வந்திருந்தனர். இதில்
முக்கியமானவர்கள் பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர்கள் முதலியோர். இந்த பாண்டிய
நாட்டிலும், மற்ற எட்டுத் திக்குகளிலிலும் இருந்தும்
மன்னர்கள் வந்திருக்கிறார்கள். கைலாயத்திலிருந்து தேவர்கள் வந்திருக்கிறார்கள்.
இதில் பதஞ்சலி முனிவர் முதலியோருக்கு, மணமகன் சிவபெருமான் என்று
தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே, சிவன், திருநடனம் ஆடிக்காட்டினால்தான், நாங்கள் திருமண விருந்து
உணவை உண்போம். இல்லையென்றால் உண்ணமாட்டோம் என்று சிவனிடம் கூறிவிட்டனர். வேறு
வழியின்றி, சிவனும் இதற்கு ஒப்புக் கொண்டார். மதுரைக்குப்
பக்கத்தில் ஒரு இடத்தில், வெள்ளியம்பலத்தை ஏற்படுத்துகிறார்.
அதில் மாணிக்க பீடிகையை (மேடையை) அமைக்கிறார். அங்கு சிவபெருமான் வந்து, திருநடனம் ஆடிக் காட்டுகிறார். விருந்தினர்கள் சிவனின் நடனத்தை நேரில்,
அதுவும் மதுரையில் கண்டு களிக்கிறார்கள்.
இதுவே சிவபெருமான் திருநடனம் காட்டிய ஆறாவது
திருவிளையாடல்.
**
No comments:
Post a Comment