Friday, October 16, 2015

திருவிளையாடல்-3

திருவிளையாடல்-3
மதுரை நகரில் சிவபெருமான் செய்த விளையாடல்களே திருவிளையாடல்.
(மதுரை நகர் உருவான கதை)
இது குலசேகர பாண்டியனின் ஆட்சி காலம். அவன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவனின் தலைநகரம் (இராஜதானி) மணவூர். அங்கு ஒரு வணிகன் இருந்தார். அவர் வெளி ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்து வரும் வணிகர். அவ்வாறு ஊர் ஊராகச் சென்று திரும்புகையில், கடம்பவனம் வருகிறார். (பின்னர் இதுவே மதுரை ஆகியது). கடம்பவனம் வெறும் காடாக கடம்ப மரங்கள் நிறைந்து இருக்கும். எனவே அதற்குப் பெயர் கடம்பவனம். அந்த வணிகன் அங்கு வரும்போது இருட்டி விடுகிறது. எனவே அந்த காட்டில் தங்கும்படி நேருகிறது. தங்கி இருக்கிறான். நடுஇரவில், ஒரே சத்தமாக இருக்கிறது. எழுந்து பார்க்கிறான். அங்கு ஒரு தெய்வீக விமானம் வந்து நிற்கிறது. அதன் கீழே சிவலிங்க பெருமான் வந்திருக்கிறார். தேலோகத்திலுள்ள எல்லாத் தேவர்கள் அங்கு வந்து கூடி விட்டார்கள். உடனே சிவனுக்கு அர்ச்சனை பூஜைகள் நடக்கிறது. மந்திரங்கள் ஒலிக்கின்றன. இதைத் தன் கண்களால் அந்த வழிப்போக்கு வணிகன் பார்க்கிறான்.
விடியற்காலையில் அந்த இடத்தை விட்டு கிளம்பி, அவன் நாடான பாண்டிய மன்னனின் அரண்மனைக்குப் போகிறான். அங்கு அரசனைச் சந்தித்து கண்ட கண் கொள்ளாக் காட்சியைக் கூறுகிறான். இன்று இரவே, சிவனும், அந்த மன்னனின் கனவில் சென்று தான் குறிப்பிடும் இடத்தில் தனக்கு கோயிலும், மக்களுக்கு ஒரு நகரமும் ஏற்படுத்துமாறு மன்னன் கனவில் சிவன் கூறிச் சென்றான். எனவே அந்த வணிகன் சொன்ன இடத்தை தேடிக் கண்டுபிடித்து, அந்த காட்டை வெட்டி, அங்கு ஒரு பெரிய ஆலயமும், மன்னனுக்கு ஒரு பெரிய அரண்மனையும், மக்களுக்கு வீடுகளும், வீதிகளும், மதில்களும், கட்டிவிட்டான். இதுவே பின்னர் பெரிய மதுரை நகரமாகியது.

**

No comments:

Post a Comment