"பதினைந்து தமிழரும் பதினைந்து சோனகரும், ஓர் கப்பலில் ஏறிச்
சென்றார்கள்.நடுக்கடலில் புயற்காற்று வீசி ஆரம்பித்தது. ஏறிப் போனவர்களில்
பாதிப்பேரை கடலிற் தள்ளினால்தான் கப்பில் மூழ்காது. மீகாமன் (கேப்டன்) தமிழன்.
எனவே முப்பது பேரையும் விருத்த வடிவில் (வட்ட வடிவில்) நிறுத்தினான். அதில் ஒன்பது
பேரில் ஒருவரை கடலில் தள்ளுவதாக சொன்னான். அனைவரும் ஒப்புக் கொண்டனர். கேப்டன்
தமிழர்களை காப்பாற்றவும் நினைத்தான். அதற்கு ஏற்றாற்போல எல்லோரையும் வட்ட வடிவில்
நிறுத்தினானாம்.
எப்படி நிறுத்தி இருப்பான்? என்பது கணக்கு.
இந்த கணக்கின் விடையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட
முடியாதாம்.
லத்தீன் மொழியில் ஒரு வாசகம் உள்ளதாம், அதை அறிந்தவர்களுக்கு
மட்டுமே இந்தக் கணக்கின் விடை தெரியுமாம்.
அது லத்தின் வாசகம்: "Populeam virgam mater regina ferbat"
இந்த லத்தீன் மொழியும் தெரியவில்லை என்றால்
அவர்களுக்கு இந்த தமிழ்ப் பாடல்:
"வேதமே பூதஞ்சாதி மேலவன் சூலமொன்றுஆதியு மானைக்கோடு மழகிய தனமுமூன்றுநாதனும் நரியின் காதும் நயனமும் நாவுந்தேர்ந்துபாதையில் வழிமறித்த பதகரைக் கடலிற்றள்ளே."
இந்தப் பாடலின் படி, அதில் சொல்லி உள்ளபடி
ஆட்களை நிறுத்த வேண்டுமாம்.
நம்ம ஊரில் சின்னக் குழந்தைகள் விளையாடுமே அந்த
விளையாட்டுப் போலத்தான் இதுவும் இருக்கும் என்று தெரிகிறது. ஒவ்வொருவரின் மேலும்
கையை வைத்துக் கொண்டு வரும்போது கடைசியாக கையை வைக்க வேண்டியன் தமிழனாக இருக்க
மாட்டான்.
No comments:
Post a Comment