நாட்டிகல் மைல்- Nautical mile
அமெரிக்காவிலிருந்து ஒரு கப்பல் சென்னைக்கு வந்ததாம். அது போர்
கப்பலாம். அதன் நீளம் 387 அடியாம். இதன் வேகத்தை ஒரு மணிக்கு 45 “கடல் மைல்”
வேகத்தில் செல்லும் என்று பத்திரிக்கை செய்தி சொல்கிறது. அது என்ன “கடல்-மைல்”? (Nautical mile- நாட்டிகல் மைல்). பூமியில், தரையில், ரோட்டில் உள்ள நீளத்தை மைல், கிலோ மீட்டர்
அளவில் சொல்கிறார்கள். பூமியின் தரையானது ஒரே தட்டையாக இருக்காது. மேலும் கீழும்,
பள்ளமும், மேடும் கொண்ட பகுதிகள். அதை சம தளத்தில் அளந்து கி.மீ. என்றும் மைல்
என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் கடல் நீரில், அதன் நீளத்தை அளப்பதற்காக இந்த கடல்-மைல் என்ற
அளவை வைத்துள்ளார்கள். ஒரு “கடல்-மைல்” என்பது 6076 அடி நீளம் உள்ள கடல் நீளமாம். இந்தக்
கணக்குப்படி பார்த்தால், 45
X 6076 = 2,73,420 அடிகள். ஒரு மைலுக்கு 5280
அடிகள். ஒரு மணிக்கு 45 கடல் மைல் வேகத்தில் அந்த கப்பல் செல்லுமாம். அப்படி
என்றால் ஒரு மணிக்கு 2,73,420 அடிகள் கடலில் போகும். (தரையில் ஒரு மைலுக்கு 5280
அடிகள்; அப்படிப் பார்த்தால் மணிக்கு 52 கி.மீ. தரை வேகத்தில் செல்லும் என்று
நினைக்கிறேன். கணக்கு தப்பாக இருந்தாலும் இருக்கலாம். எனக்குத் தெரிந்ததை உளறி
இருக்கிறேன்.
**
No comments:
Post a Comment