Showing posts with label அகத்தியர். Show all posts
Showing posts with label அகத்தியர். Show all posts

Wednesday, April 13, 2016

அகத்தியர் திருமந்திரம்-226

ஓதிய பொருளும் வல்லன் உயர் குலத்து உற்றோனாகும்
சாதியும் நெறியும் உள்ளோன் தத்துவம் உணர வல்லன்
காதலார் குழலினார்க்குக் கனத்தொடு முயல வல்லன்
ஈதொரு நாளும் செய்யான் திருவோண் நாளில் நானே!

ஓதிய பொருளும் வல்லன் உயர்குலத் துற்றோ னாகும்
சாதியு நெறியு முள்ளோன் தத்துவ முணர வல்லன்
காதலார் குழலி னார்க்குக் கனத்தொடு முயல வல்லன்
றீதொரு நாளுஞ் செய்யான் திருவோண நாளி னானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-226).

**
(அகத்தியர் திருமந்திரம் முற்றும்)

அகத்தியர் திருமந்திரம்-225

அரசுடனால் அத்தி யாகுமக் கார்ம
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவய நின் மலன் தாள் பெற்ற நீத
குருவம் பிரம உயர்குலமாமே!

அரசுட னாலத்தி யாகுமக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவய னின்மலன் றாள்பெற்ற நீத
குருவம் பிரம முயர்குல மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-225)

அகத்தியர் திருமந்திரம்-224

(வாழ்த்து)

மாசில் வீனையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் ஈங்கு இள வேனிலும்
மூசு வண்டு உறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணை அடி நிழலே!

மாசில் வீனையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
யீச னெந்தை யிணையடி நிழலே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-224)

அகத்தியர் திருமந்திரம்-223

(அட்டாங்க யோகப்பேறு)

ஆசூசமாம் சூசம் என்பர் அறிவிலார்
ஆசூசமாம் இடம் யாரும் அறிகிலார்
ஆசூசமாம் இடம் யாரும் அறிந்தபின்
ஆசௌசமாக அசுபதி அமர்ந்ததே!

ஆசூச மாசூச மென்ப ரறிவிலார்
ஆசூச மாமிட மாரு மறிகிலார்
ஆசூச மாமிட மாரு மறிந்தபின்
ஆசௌச மாக அசுபதி யமர்ந்ததே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-223)

அகத்தியர் திருமந்திரம்-222

(அட்டாங்க யோகப்பேறு)

ஏயும் சிவ போகம் ஈதன்றியோர் ஒழி
ஆயும் உபாதியை மாயா உபாதியால்
ஏய பரிய புரியம் தனது எய்யும்
சாயும் தனது வியாபகம் தானே!

ஏயுஞ் சிவபோக மீதன்றி யோரொழி
ஆயு முபாதியை மாயா வுபாதியால்
ஏய பரிய புரியுந் தனதெய்யுஞ்
சாயுந் தனது வியாபகந் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-222)

அகத்தியர் திருமந்திரம்-221

(அட்டாங்க யோகப்பேறு)

காரியமான உபாதியைத்தான் கடந்த
ஆரிய காரணமே எழுந்து என் பாலுற
வாரிய காரண மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே!

காரிய மான வுபாதியைத் தான்கடந்
தாரிய காரண மேழுந்தன் பாலுற
வாரிய காரண மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல்ச மாதியே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-221)

அகத்தியர் திருமந்திரம்-220

(அட்டாங்க யோகப்பேறு)

தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்
வாங்க வல்லார்க்கும் வலி செய்து நின்றிட்டுத்
தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்க வல்லார்கட்கும் தன்னிடமாமே!

தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்குந் திளைக்கு மமுதமுந்
தாங்கவல் லார்கட்குந் தன்னிட மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-220)

அகத்தியர் திருமந்திரம்-219

(அட்டாங்க யோகப்பேறு)

நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும்
சொல்வழியாளர் சுருங்காப் பெரும் கொடை
இல்வழியாளர் இமையவர் எண் திசைப்
பல்வழி எய்தினும் பார்வழியாகுமே!

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
யில்வழி யாள ரிமையவ ரெண்டிசைப்
பல்வழி யெய்தினும் பார்வழி யாகுமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-219)

அகத்தியர் திருமந்திரம்-218

(அட்டாங்க யோகப்பேறு)

சேருறு காலம் திசை நின்ற தேவர்கள்
ஆர் இவர் என்னவரனாம் அவன் என்ன
வேருறு தேவர்கள் எல்லாம் எதிர் கொள்ளக்
காருறு கண்டனை மெய் கண்டவாறே!

சேருறு காலந் திசைநின்ற தேவர்க
ளாரிவ னென்ன வரனா மனவனென்ன
வேருறு தேவர்க ளெல்லா மெதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-218)

அகத்தியர் திருமந்திரம்-217

(அட்டாங்க யோகப்பேறு)

செம்பொற் சிவகதி சென்று எய்தும் காலத்து
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள
வெம் பொற் தலைவன் இவனாம் எனச் சொல்ல
இன்பக் கலவி இருக்கலுமாமே!

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்து
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
வெம்பொற் றலைவ னிவனா மெனச்சொல்ல
வின்பக் கலவியி ருக்கலு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-217)

அகத்தியர் திருமந்திரம்-216

(அட்டாங்க யோகப்பேறு)

வருந்தித் தவம் செய்து வானவர் கோவாய்த்
திருந்த அமராபதிச் செல்வன் இவன் எனத்
தரும் தண் முழவம் குழலும் இயம்ப
விருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே!

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வ னிவனெனத்
தருந்தண் முழவங் குழலு மியம்ப
விருந்தின்ப மெய்துவ ரீச னருளே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-216)

அகத்தியர் திருமந்திரம்-215

(அட்டாங்க யோகப்பேறு)

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு
முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றும் சிவபதம் சேர்த்தலுமாமே!

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவ ரெதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேர்த்தலு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-215)

அகத்தியர் திருமந்திரம்-214

(அட்டாங்க யோகப்பேறு)

போதுகம் தோறும் புரிசடையான் அடி
யாது கந்தார் அமராபதிக்கே செல்வர்
ஏது கந்தான் இவன் என்று அருள் செய்திடும்
மாது கந்தாடிடும் மால் விடையோனே!

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வ
ரேதுகந் தானிவ னென்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-214)

அகத்தியர் திருமந்திரம்-213

(பெரியோரைத் துணைக்கோடல்)

அருமை வல்லான் கலை ஞாலத்துள் தோன்றும்
பெருமை வல்லோன் பிறவிச் சுழி நீந்தும்
உரிமை வல்லான் உணர்ந்து ஊழி இருக்கும்
திருமை வல்லாரொடும் சேர்ந்தன்னியானே!

அருமைவல் லான்கலை ஞாலத்துட் டோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்து
முரிமைவல் லானுணர்ந் தூழி யிருக்குந்
திருமைவல் லாரோடுஞ் சேர்ந்தன்னி யானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-213)

அகத்தியர் திருமந்திரம்-212

(பெரியோரைத் துணைக்கோடல்)

உடையான் அடியார் அடியாருடன் போய்ப்
படையார் அழன் மேனிப் பதி சென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறிவிப்ப
உடையான் வருகென ஓலமென்றாரே!

உடையா னடியா ரடியா ருடன்போய்ப்
படையா ரழன்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
வுடையான் வருகென வோலமென் றாரே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-212)

அகத்தியர் திருமந்திரம்-211

(பெரியோரைத் துணைக்கோடல்)

தார் சடையான் தன் அமரா உலகினில்
போர் புகழா எந்தை பொன்னடி சேருவர்
வாயடையா உள்ளம் தேர்வார்க்கு அருள் செய்யும்
கோவடைந்து அந்நெறி கூடலுமாமே!

தார்சடை யான்றன் றமரா யுலகினிற்
போர்புக ழாவெந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்தெறி கூடலு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-211)