Friday, June 19, 2015

தள்ளுண்டாலும்....

நள்ளுண் டாலுந லம்மஃ தன்றெனில்
எள்ளுண் டாலுமி ழிபுலை யன்னெனத்
தள்ளுண் டாலுந்த யாபதி சித்தமென்
றுள்ளுண் டாயவொ ரூக்கமொ டேகினேன்.
**
நள்ளுண்டாலும்   நலம்    அஃ தன்றெனில்
எள்ளுண்டாலும்        இழிபுலையன் எனத்
தள்ளுண்டாலும்     தயாபதி   சித்தமென்று
உள்ளுண்டாய   ஒர்   ஊக்கமொடு   ஏகினேன்.
**
நள்ளுண்டாலம் நலம் = நலத்தை விரும்பாவிட்டாலும்;
அஃது அன்று எனில் = அது இல்லாமல்போனால்;
எள்ளுண்டாலும்  எள்ளி இகழப்பட்டாலும்;
இழி புலையன் என தள்ளுண்டாலும் = இழிவான தொழில் புரிவோன் என தள்ளி விடப்பட்டாலும்;
தயாபதி சித்தமென்று = இறைவனின் விருப்பம் என்று;
உள் உண்டாய ஓர் ஊக்கமொடு = உள்ளத்தில் உண்டாகிய ஓர் துணிவுடன்;
ஏகினேன் = சென்றேன்.
**

Sunday, June 14, 2015

மழையின் பெயர்கள்


மழையின் பெயர்கள்:

மழை = துளி, திவலை, தூவல், சீகரம், தூறல், மாரி, வருடம்
         உறை, ஆலி, வானம்.
பெருமழை = ஆசாரம்.
விடாமழை = பனித்தல், சோனை.
மழைத்துளி = திவலை, தூவல், சிதர், சீகரம், ஆலி, தளி, உறை.
ஆலங்கட்டிமழை = ஆலி, கரகம், கனோபலம்.
மேகம் =  மங்குல், சீதம், பயோதரம், தாராதாரம், குயின், மழை
          எழிலி, மஞ்சு, கொண்டல், சீமூதம், கொண்மூ, முகில்
          விண், விசும்பு, மால், சலதரம், செல், புயல், கனம்
           கந்தரம், கார், மை, மாரி.
இடி =   வெடி, ஒலி, அசனி, செல், விண்ணேறு, மடங்கல்,
           உரும், அனலேறு.
மின்னல் = வித்துத்து, தடித்து, சம்பை, சபலை, சஞ்சலை
           மின்னல், கனருசி.
பனி =   இமம், துகினம்.
பரிவேடம் = ஊர்கோள், வட்டம்.
வானவில் = இந்திரதனு.

**

காலத்தின் பெயர்கள்

காலத்தின் பெயர்கள்:

காலம் = வேலை, அமையம், செவ்வி, எல்லை, பொழுது
                  பாணி, காலை, கொன்பதம்,   போழ்து.
நாழிகை = கடிகை, கன்னல், இரித்தை.
கால நுட்பம் = துடி, கலை, விகலை.
நெடும்பொழுது = நீட்டித்தல், பாணித்தல், நெடித்தல்.
காலவிரைவு = ஒல்லை, இறை, சிறுவரை, இலேசம், வல்லை, மாத்திரை.
மத்தியானம் = நண்பகல், உச்சி, நடுப்பகல்.
இரவு = அல், விபாவரி, கங்குல், அல்கல், யாமினி, நத்தம், எல்லி
             யாமம்மாலை, இரசனி, நிசி.
பகல் = எல், திவா.
நாள் = ஏல்வை, திவசம், வைகல், அல்கல், தினம், எல்லை
                ஆனியம், பகல்.
இருள் = சருவரி, அந்தகாரம், கச்சளம், தமம், துவாந்தம்
                    திமிரம், துணங்கறல்.
முன்னைநாள் = நெருநல், நென்னல்.
பின்னைநாள் = பின்றை, பிற்றை.
வைகறைபொழுது = புலரி, விடியல்.
நிலவுப்பொழுது = சந்திரிகை,
வெய்யில்பொழுது = ஆதபம், என்றூழ்.
மாலை = சாயம், சந்தி.
சாமம் = யாமம்.
பருவம் = ஆனியம், இருது (ருது).
ஒரு கலை = திதி, பக்கம்.
மாதம் = மதி, திங்கள்.
நிலவு தெரியும் காலம் = சினீவாலி.
நிலவு மறையும் காலம் = குகு.
பூரணை (பௌர்ணமி) = பவ்வம், உவா.
அமாவாசை = இந்துவோடிரவிக்கூட்டம், அமை.
கார்காலம் = ஆவணி, புரட்டாசி மாதங்கள்.
கூதிர்காலம் = ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்.
முன்பனி காலம் = மார்கழி, தை மாதங்கள்.
பின்பனி காலம் = மாசி, பங்குனி மாதங்கள்.
இளவேனில் காலம் = சித்திரை, வைகாசி மாதங்கள்.
முதுவேனில் காலம் = ஆனி, ஆடி மாதங்கள்.
வருடம் = வற்சரம், ஆண்டு, சமை, ஆயனம்.
ஆண்டில் பாதி = அயனம்
ஊழிகாலம் = உகமுடிவு, மடங்கல்.
வாழ்நாள் = ஆயுள்.
**


சந்திரனின் பெயர்கள்

சந்திரனின் பெயர்கள்:

நிலவு
சோமன்
களங்கன்
நிசாபதி
பிறை
கலையினன்
உடுவின் வேந்தன்
கலாநிதி
குபேரன்
அலவன்
சசி
திங்கள்
அம்புலி
நிசாகரன்
இமகிரணன்
தண்ணவன்
குரங்கி
மதி
இராக்கதிர்
இந்து
தானவன்
அல்லோன்
விது
குமுத நண்பன்
சுதாகரன்
வேந்தன்
ஆலோன்
முயலின்கூடு
பசுங்கதிர்தே

**

சூரியன் பெயர்கள்

சூரியன் பெயர்கள்:

பரிதி
பாற்கரன்
ஆதித்தன்
பனிப்பகை
சுடர்
பதங்கன்
இருள்வலி
சவிதா
சூரன்
எல்
மார்த்தாண்டன்
என்றூழ்
அருணன்
ஆதவன்
மித்திரன்
ஆயிரஞ்சோதியுள்ளோன்
தரணி
செங்கதிரோன்
சண்டன்
தபனன்
ஒளி
சான்றோன்
அனலி
அரி
பானு
அலரி
அண்டயோனி
கனலி
விகர்த்தனன்
கதிரவன்
பகலோன்
வெய்யோன்
தினகரன்
பகல்
சோதி
திவாகரன்
அரியமா
இனன்
உதயன்
ஞாயிறு
எல்லை
கிரணமாலி
ஏழ்பரியோன்
வேந்தன்
விரிச்சிகன்
விரோசனன்
இரவி
விண்மணி
அருக்கன்
சூரிய வட்டம் = விசயம்
சூரிய கிரகணம் = கரம், தீவிரம்.

**