காலத்தின் பெயர்கள்:
காலம் = வேலை, அமையம், செவ்வி, எல்லை, பொழுது,
பாணி, காலை, கொன், பதம், போழ்து.
பாணி, காலை, கொன், பதம், போழ்து.
நாழிகை = கடிகை, கன்னல், இரித்தை.
கால நுட்பம் = துடி, கலை, விகலை.
நெடும்பொழுது = நீட்டித்தல், பாணித்தல், நெடித்தல்.
காலவிரைவு = ஒல்லை, இறை, சிறுவரை,
இலேசம், வல்லை, மாத்திரை.
மத்தியானம் = நண்பகல், உச்சி, நடுப்பகல்.
இரவு = அல், விபாவரி, கங்குல், அல்கல், யாமினி, நத்தம்,
எல்லி,
யாமம், மாலை, இரசனி, நிசி.
யாமம், மாலை, இரசனி, நிசி.
பகல் = எல், திவா.
நாள் = ஏல்வை, திவசம், வைகல், அல்கல், தினம், எல்லை,
ஆனியம், பகல்.
ஆனியம், பகல்.
இருள் = சருவரி, அந்தகாரம், கச்சளம், தமம், துவாந்தம்,
திமிரம், துணங்கறல்.
திமிரம், துணங்கறல்.
முன்னைநாள் = நெருநல், நென்னல்.
பின்னைநாள் = பின்றை, பிற்றை.
வைகறைபொழுது = புலரி, விடியல்.
நிலவுப்பொழுது = சந்திரிகை,
வெய்யில்பொழுது = ஆதபம், என்றூழ்.
மாலை = சாயம், சந்தி.
சாமம் = யாமம்.
பருவம் = ஆனியம், இருது (ருது).
ஒரு கலை = திதி, பக்கம்.
மாதம் = மதி, திங்கள்.
நிலவு தெரியும் காலம் = சினீவாலி.
நிலவு மறையும் காலம் = குகு.
பூரணை (பௌர்ணமி) = பவ்வம், உவா.
அமாவாசை = இந்துவோடிரவிக்கூட்டம், அமை.
கார்காலம் = ஆவணி, புரட்டாசி மாதங்கள்.
கூதிர்காலம் = ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்.
முன்பனி காலம் = மார்கழி, தை மாதங்கள்.
பின்பனி காலம் = மாசி, பங்குனி மாதங்கள்.
இளவேனில் காலம் = சித்திரை, வைகாசி மாதங்கள்.
முதுவேனில் காலம் = ஆனி, ஆடி மாதங்கள்.
வருடம் = வற்சரம், ஆண்டு, சமை,
ஆயனம்.
ஆண்டில் பாதி = அயனம்
ஊழிகாலம் = உகமுடிவு, மடங்கல்.
வாழ்நாள் = ஆயுள்.
**
No comments:
Post a Comment