Sunday, June 7, 2015

ரிஷிகள்


ரிஷி அல்லது இருஷி என்பதற்கு பொருள் "சத்தியதரிசி" ஆகும்.
ஏழுவகை ரிஷிகள் உள்ளனர்.
1. பிரம்ம ரிஷி
2. தேவ ரிஷி
3. மகா ரிஷி
4. பரம ரிஷி
5. காண்டவ ரிஷி
6. சுருத ரிஷி
7. ராஜ ரிஷி

1. வசிஷ்டர் முதலான ரிஷிகள் பிரம்ம ரிஷிகள்.
2. தேவ ரிஷிகள் உலகத்துக்கு ஆன்ம ஞான உபதேசம் செய்து காக்கும் பொருட்டு ரிஷிகளாக அவதரித்தவர்கள் இந்த தேவ ரிஷிகள். நாரதன், கபிலன் முதலியோர்.
3. மகா ரிஷிகள் புத்தி தத்துவம் கடந்து மகத்தத்துவம் வரை சென்றவர்கள். வியாசர் முதலியவர்கள் மகா ரிஷிகள்.
4.பரம ரிஷிகள் என்பவர் ஆன்ம பலத்தை நாடி உலக இன்பத்தை முற்றும் துறந்தவர்கள். பேலர் முதலியவர்கள் பரம ரிஷிகள்.
5. காண்ட ரிஷிகள் வேதத்தில் ஒவ்வொரு காண்டத்தில் வல்லுனராய்  சாமானிய மக்களுக்கு அதனைப் போதித்து வருபவர்கள். ஜைமினி முதலியோர் காண்ட ரிஷிகள் ஆவார்கள்.
6. சுருத ரிஷிகள் வேதங்களைச் சிரவணம் செய்து ஒவ்வொரு சாஸ்திரத்தை எடுத்துப் பிரசுரம் செய்வோர். வைத்திய சாஸ்திரம் செய்த சுசுருதர் போன்றவர் இந்த சுருத ரிஷிகள் ஆவார்கள்.
7. ராஜ ரிஷிகள் என்பவர் மன்னருக்கு ஆட்சிமுறைகளை சொல்லிக் காட்டி, உலகியல் இயல்புகளை நிலைநாட்டுவதற்காக அவதரிப்பவர்கள். மாந்தாதா, ஜனகன் முதலியோர் ராஜ ரிஷிகள் ஆவார்கள்.


"கண்டமுத் கேட்டதும் உணர்ந்ததும் அடுத்து அரியனவான மாயா சொரூபமாய் தூல நிலை முதல் சூக்கும நிலை வரை விரிந்து கிடக்கும் இந்த அண்ட சராசரங்களின் அண்டகோடி தத்துவங்களை உள்ளது உள்ளவாறு இந்த உலகுக்கு வெளியிட்டவர்கள் இந்த மகா ரிஷிகள் ஆவார்கள். 

No comments:

Post a Comment