Saturday, June 6, 2015

அஷ்வினிதேவர்

அஷ்வினிதேவர்
இவர்கள் இருவர்கள். இரட்டையர்கள்.
சூரியனின் மனைவி சௌஞ்ஞாதேவியின் மூக்கில் பிறந்தவர்களாம்.
இவரும் மிக அழகாக இருப்பார்களாம். ஒரு நாளில் ஒரு ஊரில் ஒரு இடத்தில் தங்கிவிடாமல், ஊர்ஊராக சுற்றிதிரிவார்களாம்.

மருத்துவத்தில் கரைகண்டவர்கள். இப்போதுள்ள டாக்டர்களைப்போலவே, medicine and surgery ஆகிய ஔஷதம் (medicine என்னும் மருந்துகளைக் கொண்டு வைத்தியம் செய்யும் முறை), சஸ்திரம் (surgery  என்னும் ஆப்பரேஷன் மூலம் சரிசெய்யும் முறை) ஆகிய இருவகையான மருத்துவம் செய்து அதிசயங்களை நடத்தி வந்தனர்.

இவர்கள் ஒருநாள், வழியில் ஒரு அழகிய பெண்ணைப் பார்க்கிறார்கள். அவள் மிகச்சிறந்த அழகியாம். ஆனால் அவள் திருமணம் செய்திருக்கிற அவள் கணவனோ அசிங்கமானவனாம். தீராத நோயும் அவனுக்கு உண்டாம்.
இதைக் கண்ட வைத்தியர்கள் அஷ்வினிதேவர் (கள்), அந்தப் பெண்ணைப் பார்த்து, "உனக்கு என்ன குறை, இந்த மாதிரி ஒரு கணவனைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டனர்.

அதற்கு அந்தப் பெண், "நீங்கள் இருவரும் ஏன் மற்றவர்களின் குறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள், அப்படிச் சொல்வதால் இந்த குற்றங்கள் குறைகள் தீர்ந்துவிடவா போகிறது? என்று கேட்டிருக்கிறாள்.
அவர்களும் விடாமல், "நாங்கள் உன் கணவரின் குறைகளை தீர்த்துவிடுகிறோம். எனவே நீ ஏன் இவனைத் திருமணம் செய்தாய் என சொல்" என்று கேட்கிறார்கள்.

இவர்களின் மருத்துவ அதிசயத்தினால், அந்த கணவன் மிக அழகான இளைஞனாக மாறிவிடுகிறான். அதற்குப்பின், மருத்துவர்கள், "இப்போது உன் கதையைச் சொல்" என்று கேட்கிறார்கள்.

அவள் ---
"ஐயா நீங்கள் இருவரும் தேவ-மருத்துவர்கள். தேவர்களுக்கே நீங்கள் இருவரும்தான்  வைத்தியர்கள். அப்படிப்பட்ட பெருமையுடன் இருக்கும் உங்கள் இருவரையும் அவர்களின் ஏன் யாகங்களில் வைத்து கொண்டாட மறுக்கிறார்கள்." என்று கேட்கிறாள்.

அவர்களுக்கு வெட்கமாகப் போய்விட்டது. ஆம், இவ்வளவு திறமையான வைத்தியர்களாக, அதுவும் தேவர்களுக்கே வைத்தியர்களாக இருந்தபோதிலும், அவர்களை அந்த தேவர்கள் மதிப்பதேயில்லை. வருத்தமே!
இதை அறிந்த அவளின் கணவன், அவர்களுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு ஒரு யாகம் வளர்க்க இருப்பதாகவும், அதில் தேவர்களுடன், இந்த அசுவினி மருத்துவர்களையும் கூட இருந்து யாகத்தை நடத்தும்படியும் கேட்கிறான். அதேபோல யாகம் நடக்கிறது, தேவர்களுக்கு இணையாக அசுவினி தேவர்களும் கலந்து கொள்கின்றனர். இதைப் பார்த்த தேவர்களின் தலைவன் இந்திரன் கோபம் கொள்கிறான். தனது சக்கராயுதத்தை கையில் எடுக்கிறான். அப்போது, அசுவினி தேவர்கள், இந்திரனின் கை சோர்ந்து கீழே விழ மந்திரம் சொல்கிறார்கள். அது தெரியாத இந்திரன், என் கைகளை சரிசெய்தால், நான் எனக்கு நிகராகவும், மற்ற தேவர்களுக்கு நிகராகவும் உங்களை அமர்த்துவேன் என்று கூறினான். அவர்களும் இந்திரனின் கைகளை சரி செய்கின்றனர். அதுமுதல் தேவர்களுக்கு சமமாக அசுவினி தேவர்களும் வாழ்கின்றனர்.
அந்த பெண், தன் நன்றியை இப்படி வெளிப்படுத்திவிட்டாள்.




No comments:

Post a Comment