Wednesday, June 10, 2015

திளைத்தும் தேக்கியும் பருகியும்

அளித்து வந்துஎனக்கு ஆவென் றருளி|
     அச்சம் தீர்த்தநின் அருட்பெருங் கடலுள்|
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன்|
     திருப் பெருந்துறை மேவிய சிவனே|
வளைக்கை யானோடு மலரவன் அறியா|
     வான வாமலை மாதொரு பாகா|
களிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன்|
     கயிலை மாமலை மேவிய கடலே|

அளித்து வந்து எனக்கு ஆவென்றருளி (ஆவென்று இரக்கம் கொண்டு அருளி)|
அச்சம் தீர்த்த  (அச்சத்தை தீர்த்து) நின் அருட் பெருங் கடலுள்|
(உன் அருள் என்னும் பெருங்கடலுக்குள்) திளைத்தும் (மூங்கியும்)
தேக்கியும் (எடுத்தக் கொண்டும்) பருகியும் (குடித்தும்) உருகேன்| (உருகமாட்டேன்)
திருப்பெருந்துறை மேவிய சிவனே| வளைக்கையானோடு சங்குடைய திருமாலோடு)
மலரவன் அறியா (பிரம்மனும் அறியாத)| வான வாமலை மாதொரு பாகா|
(வான மாலையைச் சேர்ந்த மாதை, மலைமகளை உன் ஒரு
பாகத்தில் வைத்துக் கொண்டவனே) களிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன்|   
கயிலை மாமலை மேவிய கடலே|

சிவனே! மலைமகளை ஒரு பாகத்தில் வைத்திருப்பனே! கருனைக் கடலே! என்மீது கருணை வைத்து உன் அன்புக் கடலில் திளைத்தும், தேக்கி வைத்தும், பருகியும்  உருகமாட்டேன்! இன்பம் நீங்கி கலங்குகின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே!


No comments:

Post a Comment