பிறிவுஅறி யாஅன்பர் நின்அருட் பெய்கழல்
தாளினைக்கீழ்|
மறிவுஅறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை
வந்திப்பதோர்|
நெறிஅறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னை யேஅறியும்|
அறிவுஅறியேன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே|
பிறிவு அறியாஅன்பர் (உன்னைப் பிறியாத), நின்அருட் பெய்கழல் (வீரக்கழல்)
தாளினைக்கீழ் (திருவடியின் கீழ்)| மறிவுஅறியாச் (மீண்டும்
பிறவியாக திரும்பாத),
செல்வம் வந்துபெற் றார் (செல்வத்தை பெற்றவர்கள்)
உன்னை வந்திப்பதோர் (உன்னை வணங்குவது)|
நெறிஅறியேன் (நல்ல நெறி அறியவில்லயே)
நின்னையே அறியேன் (உன்னையும் அறியவில்லயே)
நின்னையேஅறியும் உன்னை அறியும்)|
அறிவுஅறியேன் (அறிவையும் அறியவில்லையே)
உடையாய் அடியேன்உன் அடைக்கலமே|
உன்னை விட்டு நீங்காத உன் அடியவர்கள், உன் திருவடிக்கு வந்தும்,
உன்னையும் அறியாமல்,
உன் அறிவையும் அறியாமல், உன்னை அறிந்து
கொள்ளும் அறிவையும் அறியாமல் இருக்கின்றேனே!
No comments:
Post a Comment