பெரும் பிரளயம் வந்த காலங்களை ஆராய்ந்திருக்கிறார்கள்.
அவைகள் குறிப்பாக, ஒவ்வொரு யுகம் முடிந்து அடுத்த யுகம் ஆரம்பிக்கும் காலமான
"யுகசந்தி"யில் இந்த பெரும் பிரளயங்கள் வந்துள்ளனவாம்.
குறிப்பாக "யுகசந்தி" என்பதை ஒரு யுகம் ஆரம்பமாவதற்கு
முன்னர் உள்ள ஐயாயிரம் வருடங்கள் கொண்ட காலத்தை யுகசந்தி என்பார்களாம்.
இந்த யுகசந்தி காலத்தில்தான் இந்த பெரும் பிரளயங்கள்
உண்டாகின்றனவாம்.
இதற்குமுன்னர் கடலுக்குள் அழிந்து போன "தென்மதுரை"
நிலமும் இதேபோன்றதொரு பிரளயத்தில்தான் அழிந்ததாம். தென் மதுரை அழிந்த காலத்தை ஒரளவு
கணக்கிட்டுள்ளனர் சரித்திர ஆசிரியர்கள். தென் மதுரை அழிந்த காலம் இன்றிலிருந்து
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர்
இருக்கலாம் என்கின்றனர்.
இப்போது கலியுகம் தொடங்கி சுமார் 5000 வருடங்கள் ஆகிவிட்டன.
அதற்கு முன் சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் இந்த பிரளயம் வந்திருக்கலாம்.
தென்மதுரை அழிந்ததும் இந்த பிரளயத்தில்தானாம்.
No comments:
Post a Comment