பிதுர்கணங்களுக்கு புதல்வியாக "அச்சோதை" என்பவள்
பிறக்கிறாள். அங்குள்ள காட்டில், 1001 வருடங்கள் கடும் தவம் இருக்கிறாள். இதை கண்ட
பிதுர்கணங்கள் அவளிடம் வந்து, அவளது கடும்தவத்தை மெச்சி,
உனக்கு வேண்டும் வரம் கேள், நாங்கள்
தந்துவிட்டுப் போகிறோம் என்று பிதுர்கணங்கள் கூறுகின்றனர்.
அதில் ஒரு பிதுர்கணமான மாவணன் என்பவர் இந்த அச்சோதை
பெண்ணுக்கு தந்தைமுறை ஆவார். அவரை தனக்கு கணவனாகும்படி வரம் கேட்கிறாள். ஏன்
இப்படி பைத்தியம்போல கேட்கிறாள்?
இதை கேட்ட அந்த பிதுர்கணங்கள், கடும் கோபம் கொண்டு,
"உன் தவம் குலையட்டும்" என்று சாபமிடுகின்றனர். தவத்தால்
கிடைத்த பலன்கள் ஏதும் இனி கிடைக்காது. இந்த தவத்தை மேலே தேவர்கள் உலகத்தில்
செய்து கொண்டு அங்கு இருக்கும்போது இந்த நிகழ்வு நடக்கிறது.
இப்போது, தவம் கலைந்து
குலைந்து அவள் அங்கிருந்து பூலோகம் நோக்கி விழுகிறாள். ஆனால் பூமியில்
விழவில்லை. அப்படியே அந்தரத்தில் தொங்கியபடி தியான நிலையிலேயே மிதக்கிறாள். அப்படி
ஒற்றைக் காலில் நின்றபடியே மீண்டும் பிதுர்கணங்களை நோக்கி கடும்தவம் செய்கிறாள்.
அமாவாசை இரவு வருகிறது. அமாவாசை அன்று யார் தவம், தியானம் செய்தாலும், அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும், மிகப் பெரும்பலன்
அதற்கு கிடைக்குமாம். இதுதான் அங்குள்ள விதி. அதன்படி, பிதுர்
கணங்கள் அவள் முன்னர் தோன்றி, அவளை மன்னித்து விட்டதாகவும்,
உன் தவத்தின் முழுப் பலனும் உனக்கு கிடைத்துவிட்டது என்றும்,
நீ தேவர்களைப்போல வாழ்ந்து, உனது 28-வது
துவாபர யுகத்திலே ஒரு மீனின் வயிற்றில் பிறப்பாய் என்றும், அப்போது
உன் பெயர் சத்தியவதி என்றும், பெரிய பெண்ணாகி, பராசர முனிவரின் மூலம் வியாசர் என்னும் ரிஷியைப் பெறுவாய் என்றும்,
அதன் பின், அங்குள்ள மன்னன் சந்தனுவுக்கு
மனைவியாகி, அவன் மூலம், வசித்திரவீரியன்,
சித்ராங்கதன் என்ற இரு மகன்களைப் பெறுவாய் என்றும், இந்தப் பிறவிகளை முடித்து, கடைசியாக
"அச்சோதை" என்னும் புண்ணிய நதியாக மாறிவிடுவாய் என்றும் வரம்
தருகின்றனர்.
இந்த, மீன் வயிற்றில் பிறந்த சத்தியவதிதான், மகாபாரதக்
கதையின் சந்தனு மன்னனின் மனைவியான மீனவப் பெண்ணான சத்தியவதி.
No comments:
Post a Comment