Saturday, June 6, 2015

அக்கினி

அக்கினி
பிரம்மாவின் மகன்தான் இந்த அக்கினியாம்.
மகாபாரதத்தில், அர்ஜூனனுக்கு "காண்டீவம்" என்னும் வில்அம்பைக் கொடுத்தவன் இந்த அக்கினிதேவனாம்.
அக்கினி என்றால் நெருப்புதானே! ஒருவேளை இந்த அம்பும் நெருப்பை கக்குமோ? எட்டுத் திசைக்கும் அக்கினி.
அக்கினியில் இரண்டு வகைகள் உண்டாம்.
1. திரேதாக்கினி.
2. பஞ்சாக்கினி.
திரேதாக்கினி மூன்று திசைகளில் நெருப்பில் வளர்க்கப்படுவது, மூன்று திசைகள், கிழக்கு, தெற்கு, மேற்கு.
பஞ்சாக்கினியை ஐந்து திசைகளில் வளர்ப்பது. ஐந்து திசைகள்: மேற்சொன்னது இல்லாத மற்ற ஐந்து திசைகள்.
அக்கினி என்னும் நெருப்பு ஐம்பெரும் பூதங்களில் நடுவில் இருப்பது. உருவமும் இருக்கும். உருவமும் இல்லாத அருவமாகவும் இருக்கும்.
அக்கினியின் பிரமாண்ட சக்தியை ரிஷிகள் உணர்ந்துள்ளனர்.
சூரியனிடத்தில் ஜோதியாக அக்கினி இருக்கிறது.
மேகத்திலே மின்னலாக அக்கினி இருக்கிறது.
பூமியிலே தீயாக அக்கினி இருக்கிறது.
கடலிலே வடவையாக அக்கினி இருக்கிறது.
மனிதன் உட்பட ஒவ்வொரு ஜீவன்களிடத்திலும் ஜடாக்கினியாக அக்கினி இருக்கிறது.
இப்படி எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதே இந்த அக்கினி.
எனவேதான் இதை துதித்துள்ளனர் முன்னோர்கள்.
"அக்கினி புராணத்தை" வியாசர் எழுதியுள்ளார்.


No comments:

Post a Comment