Wednesday, June 10, 2015

மாவடு வகிர் அன்ன

மாவடு வகிர்அன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே|
கூவிடு வாய்கும்பிக் கேஇடு வாய்தின் குறிப்பறியேன்|
பாஇடை ஆடு குழல்போல் கர்ந்து பரந்துள்ளம்|
ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்ககலமே|

மாவடு வகிர் அன்ன (மாம்பிஞ்சின் பிளவு போன்ற) கண்ணி பங்கா ( கண்களையுடைய உமை அம்மையை இடப் பக்கத்தில் உடையவனே) நின் மலரடிக்கே|
கூவிடு வாய் கும்பிக்கே (நகரத்துக்கே) இடுவாய் நின் குறிப்பறியேன்|
பாஇடை (சேலை நெய்யும் நூலிழை) ஆடுகுழல் போல்  கரந்து பரந்து உள்ளம்|
ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே|

உன் பாதங்களில் என்னைச் சேர்த்துக் கொள்வாய் அல்லது நகரத்தில் தள்ளிவிடுவாய்;
நீ என்னை என்ன செய்வாய் என்று உன் குறிப்பை என்னால் அறியமுடியவில்லை.

நூலிலையில் ஆடும் குழல்போல என் உள்ளம் பறிதவிக்கிறது. 



No comments:

Post a Comment